Posts

Showing posts from July, 2020

வாழ்வியல் கலை-பெண்கள்

பெண்களுக்கான வாழ்வியல் கலை  காலம் காலமாக பெண்களைக்  கொண்டாட, நம் சமூகம் சொல்லிக் கொடுத்துக் கொண்டேதான்  இருகிறது. பெண்களின் பெயர்களிலேயே ஆறுகளுக்கு பெயர் சூட்டியும்,  பெண்கள் நாட்டின் கண்கள், பூமிக்கே பூமாதேவி என, பெண் பெயரை இட்டும்  பெருமைப் படுத்தப்பட்டுள்ளது.     நம்மைப் பற்றிய சுய மதிப்பீட்டை மிகச்சரியாக வைத்து விட்டோம் என்றால், அவ்வாறே சமூகத்தின் பார்வைக்கும் தெரிவோம். அடுத்தவர் நம்மை சரியாகக் கணிக்கிறார்களா என்பதை அறிந்து கொள்வதில் ஆர்வத்தை விடுத்து, நம்மை நாம் சரியாக சுயமதிப்பிடுதலில்  ஆர்வம் காட்டுவோம்.  மேலும், நம்மால் தவறென்று அறியபடுவதைக் களைவோம்.     பெண்களில் சிலர், அடிக்கடி பிரச்சனைகளில் சிக்குண்டு விடுகின்றனர். அவர்கள் தீர்வுகளைத் தேடுவதில்லை. பிரச்சனைகளை சவாலாக எதிர்நோக்கும்  மனப்பக்குவத்தினை வளர்த்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. மேலும், பல பெண்கள் பிரச்சனைகளில் இருக்கும்போது, கோபமோ, அழுகையோ வெளிப்பட்டு - . அது சிந்திக்கும் திறனை குறைத்து விடுகிறது. பெண்கள் பிரச்சனைகளே இல்லாமல் வாழ வேண்டும் என்றால், பொம்மைகளாக இருந்திருக்க வேண்டும்.  பிரச்சனைகளை சவால்களாகக் கருதும்