வாழ்வியல் கலை - நேர்மறை சிந்தனைகள்
நேர்மறை சிந்தனைகள்:- நேர்மறை சிந்தனைகள் என்பது, மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமாகும். மகிழ்ச்சியான வாழ்வியலில் விரும்பியதை ஈர்ப்பதற்கும், வெற்றிக்கான பாதையை தேர்ந்தெடுப்பதற்கும், இலக்கை நோக்கி நகர்வதற்கும், செல்வத்தை ஈர்ப்பதற்கும் என பல்வேறு நிலைகளுக்கு, நமது நேர்மறை சிந்தனைகள், நேர்மறை எண்ணங்கள், நேர்மறை வார்த்தைகள் போன்றவை மார்க்கங்களாக அமைகிறது. நேர்மறை வார்த்தைகள் வெளிப்பட வேண்டும் எனில், நமது சிந்தனைகள் நேர்மறையாக அமைய வேண்டும். “நீ எதுவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதுவாக ஆவாய்” என்ற சுவாமி விவேகனந்தரின் வரிகள், இதனை உறுதி செய்கின்றன. நேர்மறை எதிர்மறை என இரு வாக்கியங்களைத்தான் நாம் வாழ்வில் அதிகம் பயன்படுத்துகிறோம். நாம் தினம் பயன்படுத்தும் வாக்கியங்களில் பெரும்பாலும் இடம் பெறுபவை, நேர்மறை வாக்கியங்களா? எதிர்மறை வாக்கியங்களா? எனச்சிந்தித்து, மாற்றம் தேவைப்படின், மாற்ற வேண்டும். நம் எதிர்காலம் பற்றிய பயமும், சூழ்நிலைகளால் ஏற்படும் தாக்கத்தினால்தான், எண்ணங...