Posts

Showing posts with the label தாகம்

உடல் மொழிகள்

உடல் மொழிகள் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நாம் நமது உடலின் மொழியை கவனித்து அதன்படி நடக்க வேண்டும். . உடல் மொழிகள் 1) வாந்தி வருவது போல் இருத்தல் வாந்தி வருவது போல உணர்வை ஏற்படுத்த உடலானது ஜீரணம் செய்ய இயலாத அல்லது கெட்டுப்போன உணவை ( Food poison ), வயிற்றின் உள்ளே இருந்து , புவியீர்ப்பு விசைக்கு எதிராக வெளியே தள்ளுவதற்கு தேவையான Force ஐ கொடுத்து அதற்கான சமிக்ஜையை நமக்கு தெரிவிக்கிறது. இதுவே வாந்தி வருவது போல் இருத்தல். சமிக்ஞை கொடுக்கப்பட்ட பிறகு உடனடியாக நாம் அந்த உணவை வாந்தி எடுத்து விட வேண்டும் அதை விடுத்து வாந்தியை நிறுத்த மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. இதனால் ஜீரணம் செய்ய இயலாத உணவு உடலில் தங்குவது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். 2) பசி எடுத்தல்   பசி என்ற உணர்வு உடல் நமக்கு உணவு வேண்டும் என்று கொடுக்கும் சமிக்கையாகும். பசி எடுக்காமல் உணவை உட்கொள்ளுதல் கூடாது நன்கு பசி எடுத்த பிறகு சாப்பிடாமலும் இருக்கக் கூடாது. 3) தலைவலி உடலுக்கு தேவையான ஓய்வு அளிக்கப்படாத போது தலைவலி பெரும்பாலும் ஏற்படுகிறது.  தலைவலி வந்த பிறகு உடலுக்கான ஓய்வினை தர வேண்டும் ஓய்வு என்பது படுத...