மகாபாரத கதாபாத்திரங்கள் (5) - சகாதேவன்
சகாதேவன் 1) தாய் தந்தை யார் தந்தை பாண்டு தாய் மாதுரி 2) யாரின் அம்சமாக மகனாக பிறந்தார்? துர்வாசர் குந்திக்கு அளித்த மந்திரம் மூலம் அஸ்வினிகுமாரர்களை மாதுரி வேண்டி அவரின் மகனாக நகுலன் , சகாதேவன் இரட்டையர்களாக பிறந்தார்கள் 3) சகாதேவனின் சிறப்பு என்ன? சகாதேவன் பசுக்களை பராமரிப்பதில் வல்லவன் ஜோதிடம் அறிந்தவன் புத்திக்கூர்மை உடையவன் 4) சகோதரர்கள் யாவர்? யுதிஷ்டிரன் பீமன் அர்ச்சுனன் நகுலன் தந்தை வழி உடன்பிறந்தோர்கள்- கௌரவர்கள் 5) மனைவிகள் புத்திரர்கள் யாவர்? மனைவி (1) திரௌபதி --- சுருதகன்மன்(மகன்) சுமித்ரா (மகள்) மனைவி(2) விஜயா - சுகோத்ரா(மகன்) 6) தாய் மாமன் பெயர் என்ன? சல்லியன் - மந்திரநாட்டு மன்னன். 7)அஞ்ஞாதவாசத்தின் போது இவர் பெயர் என்ன? விராடநாட்டு மன்னன் விராடனின் அரண்மனை பசுக்களை பராமரிப்பு செய்பவராக தந்திரிபாலன் என்ற பெயரில் இருந்தார் 8) தந்தையின் ஆலோசனையின்படி அவரின் இறப்பிற்குப்பின் அவரின் சிறுபகுதி உடல் சதையை உண்டு எதிர்காலத்தில் நடைபெறவிருக்கும் அனைத்தையும் அறிந்து கொள்ளும் ஞானத்தைப் பெற்றவர் சகாதேவன்