Posts

Showing posts with the label பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள்  இந்த புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பாகும்  கர்ப்பத்தினாலும், பிள்ளைகளை பெறுவதனாலும், பெண்களுக்கு ஏற்படும் கஷ்டங்களையும், அடிமைத்தனங்களையும் எடுத்துக்காட்டவும் மற்றும் பிள்ளைகளை அதிகமாக பெறுவதனால் ஆண் பெண் இவர்களுக்குள்ள கஷ்டங்களையும் எடுத்துக்காட்டுவதுடன் பெண்கள் நலத்துக்கு ஆண்களால், ஆண்கள் முயற்சியால் ஒரு நாளும்  நன்மை ஏற்பட்டு விடாது என்றும் பெண்கள் தங்களை ஆண்களுக்கு அடிமையாக இருக்கவே கடவுள் படைத்தார் என்பதாக நினைத்துக் கொண்டிருக்கும் எண்ணத்தை அடியோடு விட்டுவிட்டு, தாங்களும் ஆண்களுக்கு சமமானவர்கள் என்றும் எவ்விதத்திலும் தாழ்ந்தவர்கள் அல்ல என்றும் கருதிக் கொண்டு தங்களுக்கு தாங்களே பாடுபட வேண்டும் என்பதை வலியுறுத்ததே எழுதப்பட்டது இந்நூல் என்கிறார் பெரியார்  தலைப்புகள்   1) கற்பு 2) கற்பும் வள்ளுவரும்   3) காதல் 4)கல்யாண விடுதலை  5) மறுமணம் தவறல்ல  6) விபச்சாரம்  7) விதவைகள் நிலைமை  8 ) சொத்துரிமை  9)கர்ப்பத்தடை 10) பெண்கள் விடுதலைக்கு " ஆண்மை"  அழிய வேண்டும் . மேலும் விவரங்களுக்கு  புத்த...

பெண் ஏன் அடிமையானாள் தலைப்பு 3 - காதல் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 3 - காதல ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்)  புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம்  காதல்   காதல் என்றால் என்ன?  அதற்கு சக்தி என்ன?  அது எப்படி உண்டாகிறது?  அது எதுவரையில் இருக்கின்றது?  அது எந்தெந்த சமயங்களில் உண்டாகிறது?  அது எவ்வபோது மறைகின்றது ? அப்படி மறைந்து போய்விடுவதற்கான காரணம் என்ன? என்பதைப் போன்ற விஷயங்களை கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதன் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும், அதை பிரதானப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவை எளிதில் விளங்கிவிடும் என்கிறார் பெரியார். காதல் என்பது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரம் தான் இருக்க முடியும் . அப்படி வேறு ஒருவரிடம் ஏற்பட்டால் அது காதலாக இருக்க முடியாது அது விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டும் என்றும்  ஒரு இடத்தில் உண்மை காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு யாரிடமும் காமமும் விரசமோ மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது. இந்த காதல் காரணத்தா...

பெண் ஏன் அடிமையானாள் - தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும்  ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்)  புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம்  2) வள்ளுவரும் கற்பும்   தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்  பெய்யெனப் பெய்யும் மழை. " தெய்வத்தை தொழாமல் தன் தலைவனை தொழுகின்றவள், மழையை பெய்யன்றால் பெய்யும்" வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கற்புக்கு இம்மாதிரியான கருத்துக்களை கூறியிருக்க மாட்டார். எந்த பெண்ணரசியாகிலும் தன்னை ஆண் பிறவிக்கு அடிமை என்றாவது, தாம் அப்பிறப்பிக்குக் கீழ்பட்டவர்கள் என்றாவது, ஆண் தன்மையை விட பெண் தன்மை ஒரு கடுகளவாவது தாழ்ந்தது என்றாவது எண்ணிக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெண்ணரசி என்று சொல்ல நாம் ஒருகாலும் ஒப்போம். அவ்வையாரின்   "தையல் சொற்கேளேல்" ( பெண்கள் சொல்லை கேட்கக் கூடாது) "பேதமை என்பது மாதர்க்கு அணிகலன்"( அறியாமை பெண்களின் ஆபரணம்)   வள்ளுவரின்   "பெண்வழிச் சேரல்" ( பெண்கள் இஷ்டப்படி நடக்கக் கூடாது) பெண்களும் பகுத்தறிவுள்ள, சிந்தனா சக்தி உள்ள மனித ஜீ...

பெண் ஏன் அடிமையானாள் - தலைப்பு 1 -கற்பு - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 1 - கற்பு  ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்)  புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம்  1) கற்பு கற்பு என்பது சொல் தவறாமை அதாவது நாணயம் சத்தியம் ஒப்பந்தத்திற்கு விரோத மில்லாமல்......... ஆங்கிலத்தில் Virginity என்றால் பரிசுத்தம் ........ ஆரிய பாஷையில் கற்பு என்றால் அடிமை ....... திருக்குறளில் தன் தலைவனை தொழுகின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும்....... திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறள் எழுதியிருப்பாரானால் இம்மாதிரி கருத்துக்களை எழுதி இருப்பாரா!!!!!!...... என்பதை கவனிக்கும்படி வேண்டுகிறேன் என்கிறார் பெரியார். ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைக்கப்பட்டுக் கிடைப்பதற்கான காரணம் ஆண்களின் ஆதிக்கமே........ உண்மையில் பெண்கள் விடுதலை வேண்டுமென்றால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து , இரு பிறப்பிற்கும் சமமான சுயேட்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும்.   கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்...