பெண் ஏன் அடிமையானாள் - தலைப்பு 1 -கற்பு - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 1 - கற்பு 

(இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்) 

புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம் 

1) கற்பு
கற்பு என்பது சொல் தவறாமை அதாவது நாணயம் சத்தியம் ஒப்பந்தத்திற்கு விரோத மில்லாமல்.........

ஆங்கிலத்தில் Virginity என்றால் பரிசுத்தம் ........

ஆரிய பாஷையில் கற்பு என்றால் அடிமை .......

திருக்குறளில் தன் தலைவனை தொழுகின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும்.......
திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறள் எழுதியிருப்பாரானால் இம்மாதிரி கருத்துக்களை எழுதி இருப்பாரா!!!!!!......
என்பதை கவனிக்கும்படி வேண்டுகிறேன் என்கிறார் பெரியார்.

ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைக்கப்பட்டுக் கிடைப்பதற்கான காரணம் ஆண்களின் ஆதிக்கமே........

உண்மையில் பெண்கள் விடுதலை வேண்டுமென்றால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து , இரு பிறப்பிற்கும் சமமான சுயேட்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும்.   கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும் படியான நிர்பந்தக் கல்யாணங்கள் ஒழிய வேண்டும்....


ஒரு வித நிர்பந்தத்தாலும் மற்றும் 
வலிமை உள்ளவன் வலிமையற்றவனுக்கு எழுதி வைத்த தர்மத்தாலும் உண்மை கற்பு, சுதந்திர கற்பு, இயற்கை கற்பை காணமுடியாது.......

-பெரியார் 

கருத்து : கற்பு என்பது இருபாலாருக்குமானதாக இருக்க வேண்டும். கற்பை காரணம் காட்டி நிர்பந்த கல்யாணங்கள் நடத்தப் படுவது முறையல்ல. கற்பு என்பதை காரணம் காட்டி பெண்கள் விரும்பாத வாழ்வை வாழ்ந்தே ஆக வேண்டும் என்பது அநியாயம். கற்பு என்பது உடலின் உறுப்பு தொடர்பானதாக மாற்றப்பட்டுள்ளது.

 

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி