பெண் ஏன் அடிமையானாள் தலைப்பு 3 - காதல் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 3 - காதல

(இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்) 

புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம் 

காதல் 

காதல் என்றால் என்ன?
 அதற்கு சக்தி என்ன?
 அது எப்படி உண்டாகிறது?
 அது எதுவரையில் இருக்கின்றது?
 அது எந்தெந்த சமயங்களில் உண்டாகிறது?
 அது எவ்வபோது மறைகின்றது ?
அப்படி மறைந்து போய்விடுவதற்கான காரணம் என்ன?
என்பதைப் போன்ற விஷயங்களை கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால் காதல் என்பதன் சத்தற்ற தன்மையும், உண்மையற்ற தன்மையும், நிச்சயமற்ற தன்மையும், அதை பிரதானப்படுத்துவதன் அசட்டுத்தனமும் ஆகியவை எளிதில் விளங்கிவிடும் என்கிறார் பெரியார்.

காதல் என்பது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும் ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும் மாத்திரம் தான் இருக்க முடியும் . அப்படி வேறு ஒருவரிடம் ஏற்பட்டால் அது காதலாக இருக்க முடியாது அது விபச்சாரம் என்று தான் சொல்ல வேண்டும் என்றும்  ஒரு இடத்தில் உண்மை காதல் ஏற்பட்டு விட்டால், பிறகு யாரிடமும் காமமும் விரசமோ மோகமோ ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.
இந்த காதல் காரணத்தாலேயே ஒரு புருஷன் ஒரே மனைவியுடன் ஒரு மனைவி ஒரே புருஷனிடம் மாத்திரம் இருக்க வேண்டும் என்றும் கட்டாயப்படுத்தப்படுகிறது என்று அவர் கருத்தை முன் வைக்கிறார்.

அழகைக் கொண்டடோ, பருவத்தைக் கொண்டோ, அறிவைக் கொண்டோ, ஆஸ்தியைக் கொண்டோ, கல்வியை கொண்டோ, சங்கீதத்தை கொண்டோ இப்படி ஏதோஒன்றை கொண்டு தான் எந்த பெண்ணிடமும் ஆணிடமும் டமும் காதல் கொள்ள முடியும்.

காதல் கொள்ளும்போது காதலர்கள் நிலைமை, மனப்பான்மை பக்குவம், லட்சியம் ஆகியவைகள் ஒரு மதிரியாக இருக்கலாம் பிறகு கொஞ்ச காலம் கழித்த பின்பு இயற்கையாகவே
பக்குவம் நிலைமை, லட்சியம் மாறலாம். இந்த சந்தர்ப்பங்களிலும் காதலுக்காக ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து சதா அதிருப்தியில், துன்பத்தில் அழுந்த வேண்டியதுதானா என்று பார்த்தால் அப்போதும் காதலுக்கு வலுவில்லாததையும் அது பயன்படாததையும் காணலாம் என்கிறார்.

மனிதனுக்கு தானாகவே எதிலும் விரக்தி வருவதும், விருப்பம கொள்வதும்,  பிரிவதும் இயற்கையாகும்.

இதையெல்லாம் அறியாமல் மற்றவர்கள் திருப்தியிலும், சந்தோஷத்திலும் நுழைந்து கொண்டு தொட்டதற்கெல்லாம் இது காதல் அல்ல!இது காதலுக்கு விரோதம்!
 இது காம இச்சை! இது விபச்சாரம்! என்பது போன்ற அதிக பிரசங்கித்தனமான வார்த்தைகளை ஒருவித பொறுப்பில்லாதவர்கள் எல்லாம் கூறுவதால் அப்படிப்பட்டவர்கள் கூற்றையும் கூறும் காதலையும் சற்று பார்த்து விடலாம் என்று எழுதப்பட்டதே இது என்கிறார்

கருத்து 
காதல் என்பது ஏதோ ஒன்றை எதிர்பார்த்தே உருவாகின்றது. மனிதனுக்கு தானாகவே எதிலும் விரக்தி வருவதும் , வெறுப்புக் கொள்வதும் , பிரிவதும் இயற்கையாகும். இது காதலுக்கும் பொருந்தும்.
 ஒரு முறை ஒருவர் மீது காதல் ஏற்பட்டு விட்டால் வாழ்நாளில் வேறு காதல் வராது என்பதெல்லாம் சுத்தமான பொய். ஆசை ,அன்பு, நட்பு போன்றது தான் காதல் என்ற உணர்வும் ஆகும்.
ஒருவர் மீது இருக்கும் அன்பு நட்பு எப்போது வேண்டுமென்றால் மாறலாம் அதுபோல காதலும் மாறக் கூடியது தான்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(27) - திரௌபதி

தட்சன்(பிரஜாபதி)

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்