வாழ்வியல் கலை-வெற்றியின் அவசியம்
வெற்றியின் அவசியம்:- வாழ்வில் வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம். வெற்றி என்றால் என்ன என்பதிலதான் குழப்பங்களுக்கு ஆட்படுகிறோம். “தாய் 8 அடி பாய்ந்தால், குட்டி 16அடி பாய வேண்டும்” என்ற பழமொழி கொண்டு பார்த்தோமேயானால், விரைவில் விளங்கும். பெற்றோரைக் காட்டிலும் மகன்/மகள் ஒருபடி உயர்தலே வாழ்வில் முதல்நிலை வெற்றி. பெறுதல் நேற்றைய நிலையிலிருந்து இன்றைய நிலையிலான உயர்வே வெற்றி. பெற்றோர் செய்யும் அதே தொழிலை மகன் செய்ய நேர்ந்தாலும், அதில் புதுமைகளைப் புகுத்தி, பெற்றோரைவிட, தன் தனித்திறமையை வெளிக்கொணர்தலே வெற்றி. பெற்றோர் சாரதியாக இருந்தால், மகன் குறைந்தபட்சம் வாகனங்களுக்கு சொந்தக்காரனாகவாவது உயர்தலே வெற்றி. வெற்றியின் மகத்துவம் படிக்கின்ற படிப்புகளில் மட்டுமல்ல. திறமைகள் வெளிப்படும் விதத்திலும் உள்ளது. பலருக்கு வெற்றி ஏன் பெறவேண்டும் என்ற கேள்வி மன ஊனத்தை வலுவாக்கி விடும். குதிரையின் கடிவாளம் குதிரைக்காரனுடையது....