Posts

Showing posts from January, 2021

வாழ்வியல் கலை- கனவுகளின் வலிமை

                                                  கனவுகளின் வலிமை               “தூக்கத்தில் வருவது கனவல்ல.   நம்மை தூங்கவிடாமல் செய்வதே கனவு” என்ற,  டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழியை மையப்படுத்தியே, இந்த “கனவுகளின் வலிமை”.  நமது எதிர்கால இலட்சியங்களை சரியாகப் பொருத்தி, அதனை நோக்கிய பயணத்தில் ஏற்படும் சிக்கல்களை நீக்கி, பயணத்தைத் துரிதப்படுத்தி, அடைய வேண்டிய இடத்தினை அடைதலுக்கு உண்டான காட்சியின் வடிவமே கனவு.    மனிதனாகப்பிறந்தவர்கள் விலங்குகள் போல, உணவிற்காக மட்டுமே வாழ்வினை வாழ்ந்துவிட முடியாது.   நமது சமூக சூழலுக்கேற்ப அவரவர்களுக்கென பொருள் தேடுதல் என்பதும், அதன் மீதான கனவுகளின் பயண தூரமும் அமையும்.   வாழ்வில்,  இலட்சியங்கள் இல்லாதவன்,  மனநலமின்றி வாழும் மனிதனாக மட்டுமே இருக்க இயலும். இலட்சியங்கள் இல்லை என்பவர்கள், அவர்களுக்குள் இருக்கும் இலட்சியங்களைத் தேடி எடுத்திட வேண்டும்.  இலட்சியங்களும்  அதன் மீதான கனவுகளும் நம்மைப்புத்துணர்வோடு வாழ்தலுக்கு வழி வகுக்கும். நமது எண்ணங்களிலும், நினைவுகளிலும், எப்போதும் நம்மை,  கனவு காண வைக்கும் விடயங்களைத் தேர்ந்தெடுத்து, அதனை அட