Posts

Showing posts from June, 2021

வாழ்வியல் கலை- சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி

சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி  மகிழ்ச்சியான வாழ்விற்கு நமது மனமுதிர்ச்சியும் (maturity to the mind) முக்கிய பங்கு வகிக்கிறது, மனம் அமைதியான நிலையில் பதட்டமின்றி எப்போதும் வைத்திருக்க முயல்வதும், எந்த செயலையும் மன அமைதியுடன் செய்ய முற்படுவதும், புரிந்து கொள்வதில் முதன்மை நிலையில் இருப்பதும், எந்த சூழ்நிலைகளையும் தனதாக்கி சிறப்பானதாக உருபெறச்செய்வதும் முழு மனமுதிர்ச்சி உடையவர்களிடம் இயல்பாக இருக்கும். எது நல்லது எது கெட்டது, எது சரி எது தவறு என அட்டவணையிட்டு வகைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் காலச்சூழலுக்கு ஏற்றவாறு மனிதனுக்கு மனிதன் மாறுபடும் செயல்பாடுகளை பகுத்தறிந்து ஏற்பதும், நிதர்சனத்தை புரிந்து கொள்வதும் முழு மனமுதிர்ச்சி கொணடர்வர்களின் குணமாகவும் அமைந்திருக்கும்.  ஒரளவிற்கான மனமுதிர்ச்சி கொண்டவர்களாக நம்மை மாற்றிக்கொள்வது நம்முடன் பிரயாணிப்பவர்களுக்கு நம்முடனான பயணம் இனிமையானதாகவும், விருப்பமுள்ளதாகவும் அமையும். மனமுதிர்ச்சி ஏன் வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்படும் போது, மற்றவர்களை திருத்துவதை பிரதானவேலையாக எடுத்து நமது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் சக மனிதர்களுடனான பயணத்தில்