சமூகப் பார்வை
திருமதி ஏ.விஜயசக்தி, இணைப்பதிவாளர்/ மேலாண்மை இயக்குனர் திருச்செங்கோடு வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கம். நாமக்கல் மாவட்டம் கோவை மாவட்டத்தில் பணிபுரிந்தபோது நிறுவனம் சார்ந்த சமூக சேவைகள் மற்றும் தனி நபராக சமூகப் பார்வை. 1) நிறுவனம் சார்ந்த சமூக சேவைகள் கொரானா காலகட்டத்தில் ஆற்றிய சேவைகள் video பதிவேற்றம் ஸ்தாபனத்தின் வாயிலாக நிறுவனங்களின் (Sponsors) பங்களிப்புடன் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பணியாளர் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுர குடிநீர் பொடி இலவசமாக வழங்கியது. மேலும் நிறுவன வாடிக்கையாளர்கள், கோவை மாவட்ட கூட்டுறவு சங்க பணியாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கியது. கொரொனா ஊரடங்கு கால கட்டத்தில் ஸ்தாபன செயல் எல்லையில் உள்ள கிராம பொதுமக்களின் வாழ்வாதாரம் காத்திட விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து அந்தந்த ...