Posts

Showing posts from September, 2023

சுயமதிப்பு ( Self Esteem)

சுயமதிப்பு ( SELF ESTEEM ) சுயமதிப்பு என்பது நாம் நம்மைப் பற்றி நம் மீது வைக்கும் மதிப்பீடாகும். நம் மீது நாம் நல்ல மதிப்பை வைத்திருந்தால், நாம் நம்மை நேசித்தால் நம் இலக்கை அடைவதற்கான பாதை நமக்கு புலப்படும். அதனால் சுயமதிப்பை நன்கு வளர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் சுயமதிப்பை வளர்த்தல்   என்னால் முடியும் நான் அதிஷ்ட சாலி நான் சாதிக்க பிறந்தவன் நான் திறமைசாலி நான் மகிழ்ச்சிமாஇக இருக்கிறேன் என்னை எல்லோரும் மதிக்கிளார்கள் நான் பலருக்கு உதவும் நிலையில்  இருக்கின்றேன்  நான் என்னை நேசிக்கிறேன். சுயமதிப்பை அழித்தல்   என்னால் முடிமாது நான் அதிஷ்டம் இல்லாதவன் எனக்கு எல்லாமே கெட்டதுதான் நடக்கும் நான் ஏழ்மையில் இருக்கிறேன்  என் குடும்ப சூழ்நிலை சரியில்லை  முன்னேற என் படிப்பு போதாது நான் பார்க்க அழகாக இல்லை எனக்கு நேரம் சரியில்லை. நாம் நம் சுயமதிப்பை உயர்வாக வைக்க வேண்டும். சுயமதிப்பை வளர்ப்பதற்கு தேவையான யுக்திகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாமே நம்மை விரும்பவில்லை என்றால் நம்மை யார் விரும்புவார்கள் என்பதில் தெளிவு வேண்டும். சுய மதிப்பை வளர்த்து வாழ்வில் இலக்கை அடைவோம்

நச்சு மனிதர்களை ( Toxic people) சமாளிப்பது எப்படி

நச்சு மனிதர்களை  (Toxic people) கையாள்வது எப்படி? நம்முடைய புறச் சூழலில் பல நச்சு மனிதர்கள் நம்முடன் பிரயாணிப்பர். சிலர் நெருக்கமான உறவுகளாகக் கூட இருப்பர். அப்படி உள்ள உறவுகளை விட்டு விலகவும் முடியாது. எனவே நச்சு மனிதர்களின் குணங்களையும் அவர்களை எப்படி கையாள்வது என்பது பற்றியும் நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் நாம் நிம்மதியாக வாழ இயலும்.  நச்சு மனிதர்களின் குணங்கள் 1) இவர்கள் வெளியே உள்ளவர்களுக்கு மிக நல்லவர்கள் போன்ற தோற்றத்திலும் உடன் வசிப்பவர்களுக்கு நஞ்சாகும் இருப்பர் 2) அவர்கள் மட்டுமே பேசுவார்கள் எதிராளியின் பேச்சை காது கொடுத்து கேட்கக்கூட மாட்டார்கள். 3) எளிதில் உணர்ச்சிவசப்படுவர் 4) எதிர்மறை எண்ணங்கள் கொண்டவராக இருப்பர். மேலும் புறம் பேசுபவர்களும் இருப்பர். 5) இது சரி இது தவறு,  பாவம் புண்ணியம் என்று நமது செயல்களை கணித்துக் கொண்டே இருப்பர் 6) எப்போதும் கவலை தோய்ந்த முகத்துடனோ அல்லது ஏதோ உலக சாதனை புரிந்துவிட்ட முகத்துடனோ இருப்பர்.  7) இவர்களோடு இருக்கும்போது நமது மன அமைதி கெடும். இவர்களோடு பேசுவது நமக்கு பிடிக்காது 8) ஒரு காரியத்தை அழுது சாதிப்பதும் தற்கொலை செய்து கொ

மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழவும் உயர் இலக்குகளை அடையவும் உத்திகளுக்கான தலைப்புகள் ( 2)

மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வும் உயர் இலக்குகளை அடையவும் உத்திகளுக்கான தலைப்புகள் வளமான வாழ்க்கைக்கான நல்லொழுக்கங்கள். 1) சிந்தனை ஒழுக்கம்   2) சுயமதிப்பு ( Self Esteem ) 3) நேர்மறை மற்றும் எதிர்மறை எண்ணங்கள் 4) சுய விழிப்புணர்வு ( Self Awareness) 5)உணர்வுகள்( Feelings ) நல்லவற்றை ஈர்க்கும் உணர்வுகள்  A) மகிழ்ச்சி   B) நன்றியுணர்வு  C) மன நிறைவு  D) உற்சாகம்  E) குதூகலம்  F)  ஆனந்தம்  G)   H) கெட்டதை ஈர்க்கும் உணர்வுகள்   A) கோபம்  B) கவலை C) வருத்தம்  D) வெறுப்பு  E) பொறாமை  F) குற்ற உணர்வு  G) சுய வதை H) பாதிக்கப்பட்டவராக உணர்தல்  I)  துக்கம்  J)  துயரம் K)  பயம் L) சந்தேகம்  M) புலம்பல் N) குறை கூறல்  O) புறம் பேசுதல்  Q) அவமதித்தல் 6) மன உளைச்சலை ஏற்படுத்தும் காரணிகள்   7) குழந்தை வளர்ப்பு   8) பெண்களின் மன வலிமை 9) பதின்பருவத்தில் ஏற்படும் காதல்   10) உணர்வுகள் உணர்வுகள் வேறுபாடு   11)நச்சு மனிதர்களை சமாளிப்பது எப்படி   ( Toxic People) 12)ஆண் பெண் உளவியல் 13)எதிரிகளை உருவாக்கக் கூடாது   14) குழந்தைகள் மீது அளவான அக்கறை  15) எதிர் கால திட்டமிடல் 16)கனவு காணுங்கள்  ( Visuali

உடல் மொழிகள்

உடல் மொழிகள் நமது உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் நாம் நமது உடலின் மொழியை கவனித்து அதன்படி நடக்க வேண்டும். . உடல் மொழிகள் 1) வாந்தி வருவது போல் இருத்தல் வாந்தி வருவது போல உணர்வை ஏற்படுத்த உடலானது ஜீரணம் செய்ய இயலாத அல்லது கெட்டுப்போன உணவை ( Food poison ), வயிற்றின் உள்ளே இருந்து , புவியீர்ப்பு விசைக்கு எதிராக வெளியே தள்ளுவதற்கு தேவையான Force ஐ கொடுத்து அதற்கான சமிக்ஜையை நமக்கு தெரிவிக்கிறது. இதுவே வாந்தி வருவது போல் இருத்தல். சமிக்ஞை கொடுக்கப்பட்ட பிறகு உடனடியாக நாம் அந்த உணவை வாந்தி எடுத்து விட வேண்டும் அதை விடுத்து வாந்தியை நிறுத்த மாத்திரைகளை உட்கொள்ளக் கூடாது. இதனால் ஜீரணம் செய்ய இயலாத உணவு உடலில் தங்குவது அஜீரண கோளாறுகளை ஏற்படுத்தும். 2) பசி எடுத்தல்   பசி என்ற உணர்வு உடல் நமக்கு உணவு வேண்டும் என்று கொடுக்கும் சமிக்கையாகும். பசி எடுக்காமல் உணவை உட்கொள்ளுதல் கூடாது நன்கு பசி எடுத்த பிறகு சாப்பிடாமலும் இருக்கக் கூடாது. 3) தலைவலி உடலுக்கு தேவையான ஓய்வு அளிக்கப்படாத போது தலைவலி பெரும்பாலும் ஏற்படுகிறது.  தலைவலி வந்த பிறகு உடலுக்கான ஓய்வினை தர வேண்டும் ஓய்வு என்பது படுத்து தூங்க

சிந்தனை ஒழுக்கம்

சிந்தனை ஒழுக்கம். எண்ணங்களின் கோர்வையே சிந்தனையாகும்.   நல்ல எண்ணங்களின் கோர்வை நேர்மறை சிந்தனை .  கெட்ட எண்ணங்களின் கோர்வை எதிர்மறை சிந்தனை ஆகும். எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் சிந்தனையில் ஒழுக்கம் இல்லை என்றால் அவர்களின் எதிர்மறை சிந்தனை கெட்டவற்றை மட்டுமே அவர்களிடம் கொண்டு சேர்க்கும். எது நல்லது எது கெட்டது என்பதும் சரி தவறு என்பதும் பிரபஞ்ச ஈர்ப்பு விதிக்கு தெரியாது. " நாம் எந்த உணர்ச்சியால் தொடர்ந்து சூழப்பட்டு இருக்கிறோமோ   அந்த உணர்ச்சியை அதிகரிக்கச் செய்வதே பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி தத்துவமாகும்" எனவே சிந்தனையில் ஒழுக்கம் கண்டிப்பாக தேவை .   நேர்மறை சிந்தனையின் விளைவுகள்  1)ஆரோக்கியம், மகிழ்ச்சி, செல்வம், நல்ல மனிதர்கள், நல்ல உறவுகள் உடன் இருப்பர் 2) சிக்கலை தீர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள். பிரச்சினைகளை சவால்களாக கருதுவர்  3)மோசமான மனிதர்களுடன் கூட சிறந்த உறவை பராமரிப்பர் . 4)தன் திறமைகளின் மீது நம்பிக்கை கொண்டிருப்பர். 5) மன அழுத்தம் ஏற்படும் போது அதிலிருந்து விரைவில் தன்னை விடுவித்துக் கொள்வர் 6) நல்ல உறக்கம் கொள்வர் . 7) இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவா