செம்பருத்தி பூ டீ
செம்பருத்தி பூ டீ
செம்பருத்தி பூக்கள் உடலுக்கு தேவையான அபார சத்துக்கள் நிறைந்தது.
செம்பருத்தி பூக்களை டீயாகவும்,
செம்பருத்தி ஜூஸ் ஆகவும் செம்பருத்திப் பூக்களை காய வைத்து பவுடர் செய்தும் பயன்படுத்தலாம்.
செம்பருத்தி பூவின் நன்மைகள்
1)தலைமுடி வளர்ச்சிக்கு உதவுகிறது. முடி உதிர்தல் நரைத்தால் போன்றவற்றை தடுக்கிறது
2) ரத்த அழுத்தத்தை குறைக்கிறது
3)பல காயங்கள் விரைவில் ஆறுவதற்கு செம்பருத்தி எண்ணெய் மருந்தாக உபயோகப்படுகிறது
4) கெட்ட கொழுப்பின் அளவு குறைகிறது இதனால் தமனிகளில் உள்ளே உள்ள அடைப்புகள் நீங்கி கொலஸ்ட்ரால் அளவை சீராக வைத்திருக்க உதவுகிறது
5) விட்டமின் சி , இரும்புச்சத்து உள்ளது
6)ஜலதோஷம் இருமலுக்கு எதிர்ப்பு சக்தி கிடைக்கிறது
7)குறைந்த ஈஸ்ட்ரோஜன் உள்ள பெண்களுக்கு அதனை சரி செய்கிறது
8)ஆன்ட்டி ஆக்சிடென்ட் (அந்தோ சயனைடுகள், ஃப்லாவனாய்டுகள், பிளானிக் அமிலம் ஆகிய ஆர என்ற அடடி ஆக்சிடென்ட்கள்) நிறைந்து உள்ளதால் தொற்றுக்களையும் கிருமிகளையும் எதிர்த்து போராடுகிறது
9)வயது மூப்பை தள்ளிப் போடுகிறது
10)இதய நோய் , புற்றுநோய் போன ஆபத்தான நோய்களிலிருந்து காக்கிறது
11)இரத்த அணுக்கள் உருவாவதற்கு உதவுகிறது
12)உடல் உஷ்ணத்தை குறைக்கிறது
13)ரத்த அழுத்தத்தை சீராக வைக்க உதவுகிறது
செம்பருத்தி பூ டீ
பூக்கள் 5
சிறிது டீ தூள் ( தேவைப்படின்)
ஏலக்காய்
புதினா
இஞ்சி
எலுமிச்சை சாறு
செம்பருத்தி பூக்களை டீத்தூள், ஏலக்காய், புதினா, இஞ்சி ஆகியவற்றை போட்டு சில நிமிடங்கள் கொதிக்க விடவும்.
ஒரு டம்ளரில் எலுமிச்சை சாறு சிறிதளவு விட்டு அதில் இரண்டு ஸ்பூன் தேன் விட்டு, கொதிக்க வைத்த இந்த சாறை அதில் வடிகட்டி தினமும் காலையில் பருகலாம் சுவையாகவும் இருக்கும்.
செம்பருத்தி பூ ஜூஸ்
செம்பருத்திப் பூக்களை மிக்ஸியில் போட்டு நன்றாக அடித்து வடிகட்டி, நாம் சாதாரணமாக செய்யும் எலுமிச்சை சாற்றுடன் ( எலுமிச்சை சாறு+ சர்க்கரை ( அல்லது தேன்) + சிரிதளவு உப்பு) கலந்து பிரிட்ஜில் வைத்து தேவைப்படும்போது ஜூஸாக பயன்படுத்தலாம். சுவையாக இருக்கும்.
செம்பருத்தி பூ பவுடர்
செம்பருத்தி பூக்களை நிழலில் நன்றாக உலர்த்தி பவுடர் செய்து வைத்துக்கொண்டால், தினமும் சமையலில் சிறிதளவு சேர்த்துக் கொள்ளலாம் அல்லது தோசை வார்க்கும் பொழுது அதில் சிறிதளவு பொடியை தூவி பயன்படுத்தலாம்.
மகிழ்வித்து மகிழ்வோம்
Comments
Post a Comment