சக மனிதர்களுடன் சுமூக உறவு ( People skill)) - 6

சக மனிதர்களுடன் சுமூக உறவு     (People Skill)

நமக்கு சக மனிதர்களுடன் நல்ல நட்போ அல்லது உறவோ ஏற்பட வேண்டும் என்றால் கீழே உள்ள உத்திகளை சரியாக கையாள வேண்டும்.
அன்பு இருந்தால் கோபம் வராது.
அனைவரின் மீதும் அன்பு செலுத்த பழக வேண்டும்.

தவறுகள் நிகழும் போது எதிரே இருப்பவரை குறை கூறுவதை தவிர்த்து அதில் உள்ள நோக்கத்தினை (Intention) பார்க்கவும் 

1) உடன் இருப்பவர்களை அவர்களின் நல்ல  செயல்களுக்கு பாராட்டுதல் (Appreciation)
2) எதற்கும் குறை கூறாமல் இருத்தல் (Complaning)  
3) நன்றி கூறுதல் ( Gratitude)
4) மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தவறாக விமர்சனம் செய்யாதிருத்தல் (Wrong Reviews)
5) தண்டனைகளும் கண்டிப்புகளும் சண்டைகளும் சுமூக உறவை கெடுக்கும் 

6) அவர்களின் வரம்பிற்குள் நுழையாமல் இருத்தல் 
7) தேவையற்ற அறிவுரை மற்றும் ஆளோசனை வழங்காமல் இருத்தல் ( No Advices)
8) தவறுகளை குத்திக் காட்டாமல் இருத்தல் 
9) மற்றவர்கள் மீது எதிர்மறைப் பேச்சு பேசாமல் இருத்தல் 
10) முடிந்த உதவிகளை எதிர்பார்பின்றி செய்தல். 

11) மற்றவர் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும்.( Art of listening)
12) தேவை இல்லாமல் அறிவுரை வழங்குதலை தவிர்க்க வேண்டும் . யாரும் யாருடைய அறிவுரையையும் விரும்புவது இல்லை. 
13) மற்றவர்கள் அவமானமாக நினைக்கும் விஷயங்களை பேசுதல் மேலும் அவர்களை அவமதிப்பதாகும். (Insult)
14) பேசும் வார்த்தைகளில் தேன் கலந்து இருக்க வேண்டும்.



நமது சொந்தங்கள் நல்ல உறவு
நமது அயலவர்களுடன் நப்பு
நமது அலுவலக நட்பு
நமது நெருங்கிய உறவுகள் 
நமது தூர உறவுகள்
அனைத்திற்கும் மேற்படி  கையாளுதல் பொருந்தும்..

பிரச்சினை சரியாக வேண்டும் என்ற எண்ணத்தில் குறை கூறுவதை விட, குறை கூறும்போது நமது ஈகோ அங்கே வெல்கிறது. 
மற்றவர்கள் மனம் வலிக்கும் படி குறை கூறியோ, திட்டியோ நமது
ஈகோவை திருத்தி அடையச் செய்கிறோம் .
தப்பு கண்டுபிடித்துவிட்டேன் பார்த்தாயா என்று.

யாரும் எதையும் அவ்வளவு சுலபமாக மாற்றிக் கொள்ள மாட்டார்கள். 
தான் செய்வது தான் சரி என்று வாதிடுவாரகள். 
மேலும் நமது பிறப்பின் நோக்கமும் யாரையும் மாற்றுவது அல்ல.

எதையும் எதிர்பார்க்காத அன்பு ஒன்றே அனைவரையும் ஈர்க்கும் தாரக மந்திரம்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி