Posts

Showing posts from August, 2020

வாழ்வியல் கலை-பதின்பருவ துளிர் காதல்

                                                                                              பதின்பருவ துளிர் காதல்:-                  ***       பதின் பருவத்தில் ஏற்படும் காதல் எனபதான உணர்வு,  உடலின் வேதியியல் மாற்றத்தினால் உந்தப்பட்டு, மாற்றுப் பாலினத்தினர்மீது ஏற்படும் அதீதமான அன்பின் வெளிப்பாடாகவே கருதப்படுகிறது. இது, எந்த வயதில் ஏற்பட வேண்டும் என்பதற்கான கட்டுப்பாடுகள் சமூகத்தால் மட்டுமே வைக்கப்படுகிறது.  இவ்வாறான ஏற்படும் மாற்றங்கள்,  இயற்கைக்கு உட்பட்டதே என்பதை உணர்தல் அவசியம்.  எல்லா உயிரினங்களின் வேதியியல் மாற்றங்கள் நமக்கு வெளியே தெரிவதில்லை. ஏனெனில், அவற்றிற்கு யாரும் தடை போடுவதில்லை.           ஒரு வேளை,  மனித இனமும் விலங்குகள்போலே ஐந்தறிவுடன் இருந்திருந்தால்,   மனித இனக்காதல்கள் அனைத்தும்  உரிய நபருடனான இணக்கமான காதலாக உருப்பெற்றிருக்கும். ஆறாமறிவின் யோசனையே இனம், மதம், வயது, அந்தஸ்த்து, சமூகப்பார்வை, கட்டுப்பாடுகள் ஆகியவையே பல காதல்கள் உணர்வு,  இளமொட்டுகளாகக் கருக  காரணமாகி,  மனதில் உறைபொருளாக மாற்றப்படுகிறது.                   பதின்பருவ  துளிர்கின்ற காதல்களை “இந்த வயசுல உ