Posts

Showing posts from April, 2021

வாழ்வியல் கலை- இறைநம்பிக்கை பற்றிய தெளிவு

இறைநம்பிக்கை பற்றிய தெளிவு:-   நாம் பிறந்து வளரும் சூழ்நிலைகள், நமக்கான இறைமார்க்கத்தை தீர்மானிக்கிறது. கடவுள், இறைவன் என்பவர் பிரபஞ்சம் முழுவதையும் படைப்பவராகவும், காப்பவராகவும், இறப்பை தீர்மானிப்பவராகவும்  உள்ள மாபெரும் சக்தி கொண்டவராக, இறைநம்பிக்கை கொண்டவர்களால் நம்பப்படுகிறது.  பல்வேறு மதங்களை ஒட்டி, இறைவன் பலவித வடிவம் பெறுகிறார். அன்பும், கருணையுமே  கடவுள் என்றும்,  இயற்கையே  கடவுள் என்றும், இறைவன் உருவமற்றவர் என்றும் பல்வேறு விதமாக  நம்பப்படுகிறது.   பிரபஞ்சத்தின்  மொத்தத்தையும்,  கடவுள் என்ற ஒருவரோ/பலரோ ஆளுமை செய்யவில்லை என்பது,  கடவுள் மறுப்பவர்களின் கருத்தாகவும் உள்ளது. கடவுள் மனிதனை படைத்தார் என்பவர்கள், கடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆத்திகர்கள் என்றும், மனிதன் கடவுளை படைத்தான் என்பவர்கள்  கடவுள்  நம்பிக்கை இல்லாதவர்கள்  நாத்திகர்கள்  என்றும் சுருக்கமாக எடுத்துக்கொள்ளலாம்.                இந்த கட்டுரையின் நோக்கம் கடவுள் இருக்கின்றாரா, இல்லையா, எந்த கடவுள் சிறந்தது என்ற விவாதத்திற்கு இடமளிக்காமல், அவரவர் மத உணர்வுகளை மதித்து, அடுத்தவரை குறை கூறாமல்,சிறப்பானதொரு சகமனித நேயத்தோட