வாழ்வியல் கலை- சுயமதிப்பை வளர்த்தல்
சுயமதிப்பை வளர்த்தல் சுயமதிப்பு என்பது அவரவர் அவரரை விரும்புதல், ஏற்றுக்கொள்ளுதல், அங்கீகரித்தல், மதித்தல் மாற்றத்தை ஏற்றல் போன்றவற்றுடன் தொடர்புடையது. நாம் முதலில் நம்மை விரும்ப வேண்டும். இது மனம் சார்ந்த ஒன்றாகும். நமக்கான புறசூழல்களை அங்கீீகரித்து முன்னேற்றத்திற்கான வழிகளை தேடுதல் சுயமதிப்பை கூட்டும். சுயத்தை வெறுப்பதையும் சுயத்தை கேலிப்பொருளாக மற்றவர்கள் முன் சித்தரிப்பதும் சுயமதிப்பை வேரருக்கும். சுயமதிப்பை வளர்த்தலின் அவசியம் யாதெனில் நாம் நம்வாழ்வில் நம்மையும் மதித்து சக மனிதர்களையும் மதித்து நமது வாழ்வை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கான வழிதேடுதல் அவசியம். விதியை தொடர்ந்து நொந்து சொல்வதை விடுத்து, நாமே நம்மை விரும்பி, நம்மிடம் உள்ள திறமையை தேடி எடுத்தலும் உயர் லட்சியங்களை பொருத்தி அதனை அடைதலுக்கான மார்க்கங்களை காணுதலும் வாழ்வில் நிச்சயம் வெற்றி தரும். நாம் நம் மீது வைத்திக்கொள்ளும் கணிப்பே சுயமதிப்பு ஆகும். அதாவது நம்மைப்பற்றி நாம் என்ன உணர்கிறோம் என்பது சுயமதிப்பு ஆகும். உயர் சுயமதிப்பு கொண்டவர்கள் எப்போது மிக்க தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் தன்னைத்தானே விரும்பு...