அறிவு, மனம் ,

அறிவு( புத்தி)  மற்றும் மனம்

அறிவு என்பது நல்லது கெட்டது பற்றி யோசித்து முடிவெடுக்கக்கூடியது

மனம் என்பது பிடித்தது பிடிக்காதது என்பது குறித்து முடிவெடுக்கக்கூடியது.

மனதிற்கு பிடித்த சில விஷயங்களை அறிவு தவறு என்று சொல்லும் . அதனால் அறிவு சொலவதை மனம் சில சமயங்களில் கேட்காது .

அதனால் தான் சொல்வார்கள் அறிவிக்கு தெரியுது மனசு கேட்கல என்பார்கள்.

அறிவும் மனமும் ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டால் அந்த விஷயத்தில் மனக்குழப்பம் ஏற்படாது..

உதாரணமாக

அறிவு சொல்லும் சப்பாத்தி உடம்புக்கு நல்லது என்று!! மனம் சொல்லும் எனக்கு பரோட்டா தான் பிடிச்சிருக்கு என்று!!!

சில சமயங்களில் மனதிற்கு பிடித்த மாதிரியும் சில சமயங்களில் அறிவு சார்ந்தும் முடிவெடுக்க வேண்டி இருக்கும.

அறிவும் மனமும் போட்டி போடுவதால் நமக்கு மனக்குழப்பம் ஏற்படும். ஏதாவது ஒரு பக்கத்திலிருந்து நாம் முடிவை எடுத்து விட வேண்டும் . முடிவெடுத்து விட்ட பிறகு அது தவறோ என்று குழப்பிக் கொள்ளக் கூடாது. எடுத்த முடிவு சரி ஏன்று இரண்டிற்கும் புரிய வைத்துவிட வேண்டும்.


நல்லது மட்டும் தான் செய்வேன் என்று பிடிவாதம் பிடிப்பதும் , பிடித்ததை மட்டும் தான் செய்வேன் என்று பிடிவாதம் செய்வதும்  உடன் வசிப்பவர்களை எரிச்சலுட்டும்.


உதாரணமாக

நல்லது மட்டும் செய்வேன் என்று அடம் பிடித்தால் நாம் அன்னியன் படத்தில் வரும் அம்பி - உடன் வசிப்பவர்களுக்கு நம்மை பிடிக்காது.

பிடித்ததை மட்டும் தான் செய்வேன் என்றால் சைகோ. நம்மை யாருக்குமே பிடிக்காது.

சூழ்நிலைக்கு ஏற்ப மாற்றிக் கொள்ள பழக வேண்டும்  அதுவே நமக்கும் உடன் வசிப்பவர்களுக்கும் மகிழ்ச்சி தரும் 

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி