நெல்லிக்காய் டீ

நெல்லிக்காய் டீ 

நெல்லிக்காய் உடலுக்கு மிகவும் சிறந்த உணவு அதனை தினசரி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

நன்மைகள் 

அல்சரை குணமாக்குகிறது,
 எடை குறைய உதவுகிறது மலச்சிக்கலை சரி செய்கிறது,
 ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது, பார்வையை மேம்படுத்துகிறது, 
ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது, 
நீரிழிவை தடுக்கிறது, 
கல்லீரலுக்கு நல்லது,
இதயத் தசைகளை வலிமையாக்குகிறது,
முடி பிரச்சினைகளை சரி செய்கிறது, ஞாப சக்தியை வலுவாக்குகிறது,
கெட்ட கொழுப்பை குறைக்கிறது,
ஞாபகசக்தியை அதிகரிக்கிறது,
பொலிவான முகத் தோற்றம்,
வயது முதிர் தோற்றத்தினை குறைக்கிறது,
 சருமத்தின் பல பிரச்சனைகளுக்கு தீர்வாகிறது. 
இன்னும் ஏராளமான பலன்கள் உண்டாகும்.

தினசரி Fresh நெல்லிக்காயை பயன்படுத்தலாம் அல்லது நெல்லி சாற்றினை Ice cube ஆக தயார் செய்து Freezer ல் வைத்து டீ போடும்போது பயன் படுத்தலாம் 

நெல்லிக்காய் டீ செய்முறை 

நெல்லிக்காய் ஜூஸ் சிறிதளவு 
இஞ்சி சிறிதளவு 
10 புதினா இலைகள் 
5 செம்பருத்தி பூக்கள் 

ஆகியவற்றை கொதிக்கவைத்து வடிகட்டி 
எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து தினமும் காலையில் சூடாக சாப்பிட சுவையாகவும் இருக்கும். உடலுக்கும் ஏற்றது.

( Freeze செய்யும் முறை: ஐந்து நெல்லிக்காய் கொட்டை நீக்கயது, பெரிய துண்டு இஞ்சி, ஒரு கைப்பிடி புதினா ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து, அதனை வடிகட்டி ப்ரீசானதும் எடுத்து ஒரு டப்பாவில் போட்டு வைத்து தினமும் ஒரு நெல்லி ஐஸ்கியூபை மட்டும் எடுத்து பயன்படுத்தலாம் ஒரு நபருக்கு.  10 நாட்கள் வரை Store செய்யலாம் ) 

டீ, காபி சாப்பிடும் பழக்கத்தில் இருந்து தப்பிக்கலாம்.

மகிழ்வித்து மகிழ்வோம் 

Comments

Popular posts from this blog

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி

ஈர்ப்பு விதியை பயன்படுத்துவது எப்படி