வாழ்வியல் கலை - மன அழுத்தம் உடைத்தெறிதல்
மனஅழுத்தம் உடைத்தெறிதல் வாழ்வில் மனதை உறைய வைக்கும் ஏமாற்றங்கள், வடுவாக்கும் பிரிவுகள், அனுக்ஷனமும் நினைவூட்டும் இழப்புகள், தாங்கொணாத துயரங்கள், மன்னிக்க இயலா துரோகங்கள், காரணமின்றி ஏற்பட்ட காயங்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளால், மனம் சோகங்களினால் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தினால் வெளிப்படும் பாதிப்பே, தீவிர மனஅழுத்தம் எனப்படுகிறது. தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் ஏற்படும் அழுத்தம், உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தும். இவைகள் உடலில் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும். இதனால், உடலில் நோய் எதிர்ப்புத்திறனையும் குறைத்து விடக்கூடும். அதிக கவலைகள், தினசரி ஏற்படுகின்ற வேலைப்பளு, முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் விடயங்கள்,புறச்சூழல் போன்றவை, தற்காலிக மனஅழுத்தத்தை, தினம் தினம் ஏற்படுத்தக் கூடும். ஏற்படும் மனஅழுத்தத்தால் பதட்டம், பரபரப்பு, பயம், எதிர்மறை எண்ணங்கள், தன்னுணர்வற்ற நிலை, எதிலும் நாட்டமின்மை,தெளிவற்ற மனம், கவனமின்மை, கவனச்சிதறல் போன்ற செயல்களை ஏற்படுத்தி, மனம் இயம்பு நிலையில் இருக்க ...