திருமாலின் தசாவதாரம் (3)--வராக அவதாரம்

திருமாலின் தசாவதாரங்கள்

 திருமால்   காக்கும் கடவுள் ஆவார். இவர்  உலக உயிர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழச்செய்ய பத்து அவதாரங்களை இந்த பூமியில் எடுக்கின்றார். 
தீமைகளை நீக்கி உலக உயிர்களின் நன்மைக்காகவும் நல்வாழ்விற்காகவும் விஷ்ணு வின்  அவதாரங்களே திருமாலின் பத்து அவதாரங்கள் (தசாவதாரம்) என்று அழைக்கப்படுகிறது 

மூன்றாம் அவதாரம்

3) வராக அவதாரம்

கிருதயுகத்தில் நடைபெற்றது வராகம் என்பதற்கு பன்றி என்ற பொருள் ஆகும்.
காசிபர்- திதி தம்பதிகளின் மகனான
இரண்யாட்சன் 
(இரணியனின் தம்பி) என்ற அரக்கன் பிரம்மதேவனின் பெற்ற வரத்தினால் மூன்று உலகையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருந்தான். இரண்யாட்சன் பூமியை எடுத்துக் கொண்டு கடலுக்கு அடியில் மறைத்து வைத்தான்.
அதனால் தேவர்கள் எல்லோரும் இரண்யாட்சனிடபிருந்து  தங்களையும் உலக உயிர்களையும் காக்க விஷ்ணுவிடம் வேண்டினார்கள்.  விஷ்ணு/திருமால் வெள்ளை நிற பன்றியாக வராக அவதாரம் எடுத்து இரணியாட்சனை வென்று பூமியை தன் கொம்புகளால் தாங்கி வெளிக்கொணர்ந்து உலக உயிர்களை காத்தார்.

 வராகமூர்த்தியானவர் 
 பன்றி முகத்துடன் கொம்புகளுடன் பூமியைத் தாங்கியவண்ணம் நான்கு கைகளுடன் உடல்வாகுடன் கொண்டார்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி