திருமாலின் தசாவதாரம் (5)-வாமன அவதாரம்

வாமன அவதாரம்

 இது திருமாலின் ஐந்தாவது அவதாரம்.
வாமனன் என்றால் குள்ள வடிவானவன் என்பது பொருள்.
வாமன அவதாரத்தில் சிறுவனாக ஒரு கையில் தாழம்பூ உடையுடன் மறு கையில் கமண்டலத்தை பிடித்து இருப்பார் விஷ்ணு.

காசிபர் முனிவர்- திதி தம்பதியின் மகனாக பிறந்தவர்கள் தைத்தியர்களான
இரணியன்,இரணியாட்சன்.
அவர்களின் வழித்தோன்றலான
மகாபலி சக்கரவர்த்தி அசுர குலத்தில் பிறந்தாலும் மாபெரும் கொடை உள்ளம் கொண்ட வீரன் ஆவார்‌. அவர் மக்களை மிகவும் நேசித்தவர்.  தனது ஆட்சியின் கீழ் மிக செழிப்பாகவும் மக்கள் மிக்க மகிழ்ச்சியாகவும் வாழ வழிவகை செய்தார்.

மகாபலி இதனால் தனக்குள் பெரும் கர்வம் கொண்டிருந்தான்
மகாபலி சக்கரவர்த்தியின் கர்வத்தை அடக்கி அவருக்கு அருள் புரியவும் 
அதிதியின் (தேவர்களின் தாய்)வேண்டுதலின் படி தேவர்களைக் காக்கவும் திருமால் எடுத்த அவதாரம வாமன அவதாரம்.
 மகாபலி சக்கரவர்த்தி மூவுலகையும் ஆள்வதற்காக செய்யப்பட்ட ராஜசுய யாகத்தில்  கலந்து கொள்ள வந்த வாமனன் மூன்றடி நிலத்தை தானமாக வேண்டும் என மகாபலியிடம் கேட்டான்.

 சுக்ராச்சாரியர் (அசுரர்கள் குரு)
"வந்திருப்பவன் சாதரணமானவன் அல்ல" விஷ்ணு போல் தெரிகிறது என்றார். விஷ்ணுவே என்னிடம் தானம் பெற வந்தான் என்றால் நான் எவ்வளவு உயர்ந்தவன் என்றென்னி  மூன்றடி தானம் தர மகாபலி சம்மதித்தான். 
உடன் வாமனன்  வடிவில் இருந்த விஷ்ணு 
திரிவிக்கிரமன் ஆக உருவம் கொண்டு வானத்தை ஓர் அடியாலும் பூமியை ஓரடியால் அளந்து மூன்றாவது அடியை எங்கே வைப்பது எனக் கேட்க, என் தலையில் வையுங்கள் என தன் கர்வம் விட்டு சொன்னான்.
மகாபலிச் சக்கரவர்த்தியின் தலையில் கால் வைத்து அழுத்தி பாதாள லோகத்திற்கு அரசனாக்கினார் .

அசுரனாக இருந்தாலும் மக்களுக்கு நல்லவற்றை செய்த மகாபலி சக்கரவர்த்தியிடம் விஷ்ணு என்ன வரம் வேண்டும் என்று கேட்டார் .
அதற்கு மகாபலி என் மக்களை நான் ஆண்டுக்கு ஒரு முறை வந்து பார்த்து அவர்கள் எப்படி வாழ்கிறார்கள் என பார்த்த செல்ல வேண்டும் என்று கேட்டான்.  அதற்கு அப்படியே ஆகட்டும் நீ உன் மக்களை வந்து பார்ப்பதை பண்டிகையை கொண்டாடுவார்கள் என விஷ்ணு வரமளித்தார்.

பத்து நாட்கள் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகை ஓணம் பண்டிகை. கடைசி நாளான திருவோண நட்சத்திரத்தின் போது மகாபலி மக்களை காண வருவதாக கருத்து நிலவுகிறது

(காசிபர்- திதி மகன்கள் இரணியண்,இரணியாட்சன்

இரணியனின் மகன்கள்
பிரகலாதன்,
அனுக்ராதான்,
ஹரதன்,
சம்ஹிலாதன்

பிரகலாதன் மகன் விரோசனன்

விரோசனன் - தேவம்பா  மகன் மகாபலி

மகாபலி மகன் பாணாசுரன்

பாணாசுரன் மகள் உஷஸ்--கிருஷ்ணனின் பேரனான அனிருத்னை மணந்தார்.)
       **********************

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி