மகாபாரத கதாபாத்திரங்கள்(92)-சிசுபாலன்

சிசுபாலன்
(சேதி நாட்டு அரசன்)


கிருஷ்ணனின் அத்தை மகன்

பிறப்பு

சிசுபாலன் பிறக்கும் பொழுதே நான்கு கைகளையும் மூன்று கண்களையுமுடையனாயிருந்தான். அப்பொழுது அனைவரும் இது என்னவென்று வியக்கும்போது ஆகாயவாணியார், யார் இவனைத் தொடுகையில் இவனது கைகளிரண்டும் மூன்றாம் விழியும் மறையுமோ, அவனால் இவனுக்கு மரணம் என்று கூறிற்று. அவ்வாறே பலரும் தொடுகையில் மறைபடாத கைகளும் கண்ணும் கண்ணபிரான் தொட்டதும் மறைந்தன, அதனால் ‘இவனைக் கொல்பவன் கண்ணனே’ என்றறிந்த சிசுபாலனின் தாய், யாது செய்யினும் என் மகனைக் கொல்லலாகாது’ என்று கண்ணனை வேண்ட, அந்த அத்தையின் நன்மொழிக்கு இணங்கிய கிருஷ்ணன் ‘இவன் எனக்கு நூறு பிழைசெய்யுமளவும் இவன் பிழையை நான் பொறுப்பேன் என்று கூறியருளினன். 

இறப்பு

இந்திரபிரஸ்தத்தில் ராஜசுய யாகம் நடைபெறும் பொழுது சிசுபாலன் 100 தவறுகளை தாண்டி செய்ததால் கிருஷ்ணன் சக்கராயுதத்தால் சிசுபாலனை கொன்றான்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி