மகாபாரத கதாபாத்திரங்கள்-ஜரா

ஜரா முன் ஜென்மம்

 துவாரகையை ஆட்சி செய்து கொண்டிருந்த கிருஷ்ணன் பூலோகத்தில் இந்த அவதாரம் முடியப்போகும் சூழ்நிலையில் தன் இறுதிக்காலத்தை அறிந்து ஒரு நாள் அடர்ந்த காட்டுப் பகுதியில் புதர் அருகில் கால்களை நீட்டி ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார்.
 அப்போது ஒரு வேடன் முயலை துரத்திக் கொண்டு வந்தான் புதர் பகுதியில் இருந்த கிருஷ்ணனின் கால்களை பார்த்து முயல் என்று நினைத்து அம்பெய்தினான். அது கிருஷ்ணனின் வலது காலில் பலமாக தைததது.

உடன் அந்த வேடன் கிருஷ்ணரிடம் ஓடி வந்து மன்னிப்பு கோரினான் .அப்பொழுது கிருஷ்ணன் ,
நான் திரேதயுகத்தில் ராமனாக அவதரித்தபோது வாலியை மறைந்திருந்து அம்பு எய்தி கொன்றேன்.
 அப்பொழுது வாலி "இதே நிலைமை உனக்கு என்னால் ஏற்படும் என்று கூறி சாபமிட்டான்".
அந்த வாலியே இந்த ஜென்மத்தில் ஜராவா பிறந்து என்னை அம்பெய்தி உள்ளாய் என்று கூறினார்.

இன்றுடன் என்னுடைய இந்த அவதாரத்தின் பூலோக வாழ்வு நிறைவடைகிறது என்று கூறி
நீ நீடூழி வாழ்வாயாக என்று வாழ்த்தினார்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி