மகாபாரத கதாபாத்திரங்கள்-கல்பகாலம்

கல்பகாலம்

மும்மூர்த்திகளில் ஒருவரும்,படைப்புக்கடவுளான பிரம்மாவின் ஒரு பகலின் கால அளவு கல்பகாலம் எனப்படுகிறது.
அதாவது ஆயிரம் மகாயுகங்களைக் கொண்டது.

ஒரு மகாயுகம்(சதுர்யுகம்) என்பது நான்கு யுகங்களைக் கொண்டது.

    யுகம்         ஆண்டுகள்
கிருத யுகம்.    1728000 
திரேதாயுகம். 1296000
துவாபரயுகம்   864000
கலியுகம்.          432000

மொத்தம்.      43,20,000

ஒரு மகாயுகம் என்பது 43 லட்சத்து 20 ஆயிரம் மனித ஆண்டுகளை கொண்டது.
 ஆயிரம் மகா யோகங்கள் என்பது 432 கோடி ஆண்டுகளை கொண்டது.
இதுவே பிரம்மாவின் பகல் பொழுது கால அளவாகும்.


ஒரு கல்ப காலத்தில் 14 "மனு"க்களும் 
14 "இந்திரர்கள்" வந்து செல்வர்.
"மனு" என்பவர் பூமியை ஆட்சி செய்பவர்  
"இந்திரன்" தேவலோகத்தை ஆட்சி செய்பவர்
 ஒரு மனுவின் (ஒரு இந்திரனின்) காலம் 71 மகாயுகங்கள்‌.
 இக்கால அளவே " ஒரு மன்மந்திரம்" என்று பெயர் .

இரு மன்வந்திரங்களுக்கு  இடையில் ஒரு சிரிய இடைவெளி காலம் இருக்கும். அதன் பெயர் "சந்தியா காலம்" எனப்படும்.
அதாவது ஒரு கிருதயுக கால அளவு(17.28 லட்சம் ஆண்டுகள்) இடைவெளி(சந்தியா காலம்) இருக்கும்.
அதாவது 6 மகாயுகங்கள்.

 ஒரு பிரம்மாவின் ஒரு பகலில் 71*14(994) மகாயுகங்களும்

 (15*17.28/43.20) 6 மகாயுகங்களைக் கொண்ட சந்தியா  காலங்களும்  இருக்கும்.

71*14=994 மகாயுகங்கள்
15*17.28/43 2=6 மகாயுகங்கள்

14 மன்வந்திரங்களின் பெயர்கள்

1)சுவாயம்பு மன்வந்தரம்
2)சுவாரோசிஷ மன்வந்தரம்
3)உத்தம மன்வந்தரம்
4)தாமச மன்வந்தரம்
5)ரைவத மன்வந்தரம்
6)சாக்ஷிஷ மன்வந்தரம்
7)வைவஸ்வத மன்வந்தரம்

8)ஸாவர்ணி மன்வந்திரம்
9)தக்ஷஸாவர்ணி மன்வந்திரம்
10)பிரம்மஸாவர்ணி மன்வந்திரம்
11)தர்மஸாவர்ணி மன்வந்திரம்
12)ருத்ரஸாவர்ணி மன்வந்திரம்
13)தேவஸாவர்ணி மன்வந்திரம்
14)இந்திரஸாவர்ணி
மன்வந்திரம்


தற்பொழுது ஏழாவது மனுவான சூரிய தேவனின் மகனான வைவஸ்வத மனு  ஆட்சி.

இன்றைய மன்வந்திரமான ஏழாவது வைவஸ்ஸத மன்வந்திரத்தில்  27(மொத்தம் 71)
 மகாயுகங்கள் முடிந்து 28வது மகாயுகம் நடந்துகொண்டு இருக்கிறது .
அதில் 
கிருதயுகம் 
திரேதாயுகம் 
துவாபரயுகம் முடிவடைந்து கலியுகம் நடந்து கொண்டிருக்கிறது.

மேற்குறிப்பிட்ட அனைத்தும்
மகாபாரத இதிகாசத்தின்படி

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி