வளர்ந்த குழந்தைகள் மீது அளவாக மேலாண்மை

வளர்ந்த குழந்தைகள் மீது அளவான மேலாண்மை 

குழந்தைகள் வளர்ப்பில் பெற்றோர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் மீதுள்ள அதிகப்படியான பாசத்தின் காரணமாக அதிக மேலாண்மை செய்வது,  அவர்களின் ஒவ்வொரு விஷயத்திலும் எடுத்துக் கொள்வது அவர்களை வளர விடாமலும் தனித்தன்மையுடன் இருக்க விடாமல் செய்துவிடும். அவர்கள் மீது அதிகப்படியான பாசத்தை வைத்தாலும் அவர்கள் மீது காட்டும் மேலாண்மை அவர்கள் கற்றுக் கொள்ளும் படியாக இருக்க வேண்டும்

1) வளர்ந்த குழந்தைகள் மீது அளவான மேலாண்மை செய்ய வேண்டும். அதிகப்படியான அக்கறை (அ) மேலாண்மை ( Micro Management ) அவர்களை வளர விடாது.

2) அவர்களின் எல்லா விஷயங்களிலும் பெற்றோர் அக்கரை என்ற பெயரில் தலையிடுவது அவர்களை கற்றுக் கொள்ள விடாது.

3) அதிகப்படியான மேலாண்மை குழந்தைகள் எப்போதும் பெற்றோரை சார்ந்து வாழும் தன்மைக்கு வழி வகுத்து விடும்.  அது பிற்காலத்தில் பெற்றோரின் பொறுப்பை அதிகமாக்கிவிடும்.

4) எப்போதும் பெற்றோரிடமிருந்து அதிக எதிர்பார்ப்பை குழந்தைகள் மத்தியில் ஏற்படுத்தி விடும்

5) தனித் தன்மை ( Individually) போய்விடும் . திறமைகள் (Talent ) வெளிப்படாது.

6) பெற்றோரிடம் அதிக அதிகாரத்தை ஏற்படுத்தி விடும். ( Domination)

7)அளவான மேலாண்மை குழந்தைகளை சீராக்கும்.

8) எப்போதும் கண்காணித்துக் கொண்டும் அறிவுரை கூறிக்கொண்டும் இருப்பது பிள்ளைகள் மனதில் பெற்றோர் மீது அதிக வெறுப்பை ஏற்படுத்திவிடும்.

9) பதின்பருவ குழந்தைகளின் உணர்வுகளை புரிந்து கொள்ள வேண்டும் 

10) நல்லவற்றை சொல்லித் தருகிறேன் பேர்வழி என்று அவர்களின் தனியுரிமை ( Privacy) பாதிக்கப்படுவதை பெற்றோர்கள் உணர வேண்டும் 

குழந்தைகள் அவர்களின் குழந்தை பருவத்தை நல்ல மகிழ்ச்சியான சூழ்நிலையில் கழிக்க வேண்டும். அனைத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் . சக மனிதர்களுடன் பழகும் குணத்தையும் கற்றுக் கொள்ள வேண்டும் . அவர்கள் திறமை மற்றும் தனித்தன்மை வெளிப்பட வேண்டும். எனவே பெற்றோர் அளவான மேலாண்மையுடன் குழந்தைகளை கற்றுக்கொள்ள விட வேண்டும்.

மேலும் தெரிந்து கொள்ள




Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி