அன்பு, பாசம், காதல் வேறுபாடு

அன்பு, பாசம், காதல் வேறுபாடு
(ஆங்கிலத்தில் Love)
தமிழில் இதற்கு 3 வார்த்தைகள் உள்ளது.

அன்பின் வடிவங்கள்
நேசம்
பாசம்
காதல்
கருணை
இரக்கம்
ஈரம்

அன்பு

எதிர்பார்ப்பு இன்றி நேசம் வருவது
எல்லா மனிதர்கள் மீதும் வரலாம்
எல்லா உயிர்கள் மீதும் வைக்கப்படுவது

உதாரணம்
எல்லா உயிர்களும் நலம் பெற எண்ணம், 
எந்த எதிர்பார்ப்பும் இன்றி உதவுவது
எந்த எதிர்பார்ப்பும் இன்றி அக்கறை காட்டுவது

பாசம் 

நெருங்கிய உறவுகள் மீது நேசம் வைப்பது
இரத்த உறவுகள் மீது வைப்பது
உயிர் தோழமை மேல் வைப்பது 


உதாரணம் 
தாய் , தந்தை அவர்களின் மகள் மீதும் மகன் மீதும வைக்கும் நேசம்.
குழந்தைகள் அவர்களின் தாய் தந்தை மீது வைப்பது.
இப்படி பட்ட உறவுகள் என்ன செய்தாலும் மன்னித்துவிட தோன்றும்

காதல்

என்னுடைய என்ற  உடைமையாக கருதும் உறவின் மீது வரும் நேசம் .

உதாரணம் 
ஆண் பெண் உடல் மற்றும் மன ரீதியான ஈர்ப்பால் வைக்கும் நேசம் தான் காதல் 
ஒருவருக்கு ஒருவர் தன்னுடைய உரிமைப் பொருளாக நினைப்பது

உதாரணம் 

ஒரு பெண் தன் தாய் மீது வைப்பது பாசம் தன் மாமியார் மீது வைப்பது அன்பு.
ஒரு பெண் தன் மகள் மீது வைப்பது பாசம், மருமகள் மீது வைப்பது அன்பு.

கணவன் அல்லது காதலன் தன் மனைவி அல்லது காதலி மீது வைப்பது காதல்

ஒரு ஆண் தன் அம்மா மீது வைக்கும் அன்பு தான் பாசம்
தன் குழந்தைகள் மீது வைப்பது பாசம்
அதீத அன்பே பாசம் 
தன் மனைவி மீது வைப்பது காதல் 
தன் ஓட்டுநர் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பது அன்பு

விதிவிலக்குகள் விதிகள் ஆகாது.

1)சிலருக்கு அன்பு மட்டும் தான் தெரியும்.
பிள்ளைகள் மீதும் , மனைவி மீதும்,  பணியாட்கள் மீதும்,  பறவைகள் மீதும் ஒரே மாதிரியான அன்பு மட்டுமே செலுத்துவார்கள்.
பாசம், காதல் பற்றி இவர்களுக்கு தெரியாது.

2) நச்சு மனிதர்கள் யார் மீதும் அன்போ பாசமோ காதலோ கொள்ள மாட்டார்கள். அவர்களுக்கு அவைகள் தெரியாது.

3) சில உறவுகள் நெருக்க உறவுகளிடம் பாசம் காட்டுவார்கள். ஆனால் மற்ற யாரிடம் அன்பை காட்ட மாட்டார்கள்.


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி