உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம், சிந்தனை ஒழுக்கம்

உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம், சிந்தனை ஒழுக்கம் 

உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால் உணவில் மட்டும் கவனம் செலுத்தினால் போதாது.  உடல் மொழிகளை கவனிக்க வேண்டும். உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம், சிந்தனை ஒழுக்கம் ஆகிய அனைத்தும் இருந்தால் மட்டுமே உடல் ஆரோக்கியமாக இருக்கும்.
உடலும் மனமும் இரட்டை பிறவிகள் ஒன்றில்லாமல் ஒன்று சுகப்பாடாது.

உடல் ஒழுக்கம்

1)பசித்த பின் சாப்பிட வேண்டும்.

2)தாகம் எடுத்த பின் நீர் அருந்த வேண்டும.

3) நாக்கின் சுவை விரும்பும் படி உணவு உட்கொள்ள வேண்டும்.

4) ஏப்பம் வந்த பிறகு தொடர்ந்து சாப்பிடக்கூடாது.

5) தியானம், உடற்பயிற்சி, மூச்சுப் பயிற்சி செய்ய வேண்டும்.

6) சீரான உழைப்பு, தேவையான ஓய்வு, நல்ல உறக்கம் கொள்ள வேண்டும்.

7)உடல் மொழியை கவனித்து அதன்படி நடக்க வேண்டும்.

8) உடலுக்கு தீங்கை ஏற்படுத்தும் உணவு பண்டங்களையும் போதை வஸ்துக்களையும் சாப்பிடக்கூடாது.

மன ஒழுக்கம்

1)நேர்மறை எண்ணங்கள், நேர்மறை சிந்தனை, நேர்மறை வார்த்தைகளை உபயோகப்படுத்த வேண்டும்.

2) நல்லதை ஈர்க்கும் உணர்ச்சிகளில் பெரும்பாலான நேரங்களில் இருக்க வேண்டும்

3) யாரையும் பற்றி புறம் பேசுதல், குறை கூறுதல், சபித்தல், சண்டையிடுதல் கூடாது.

4) மற்றவர்களை பாராட்டும் குணத்தை வளர்த்துக் கொள்ள வேண்டும்.

5) முடிந்தவரை மற்றவர்களுக்கு உதவ வேண்டும்.


1)எண்ணங்களின் கோர்வையை சிந்தனை.

2) நல்ல எண்ணங்களின் கோர்வை நேர்மறை சிந்தனை.

3)கெட்ட எண்ணங்களின் கோர்வை எதிர்மறை சிந்தனை.

4) எப்பொழுதும் நல்ல எண்ணங்களின் கோர்வையான நேர்மறை சிந்தனையுடன் மனதை வைத்து இருப்பதே சிந்தனை ஒழுக்கம்.


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி