ராமாயண கிளை கதை 1 - வாலி, சுக்ரீவன் பிறப்பு
வாலி - சுக்ரீவன் பிறப்பு.
சூரிய பகவானின் தேரோட்டின் பெயர் அருணன்.
இவருக்கு இந்திரலோகத்தில் இருக்கக்கூடிய மேனகாவின் நடனத்தை பார்க்க வேண்டும் என்று ரொம்ப மிகவும் ஆசை.
ஒரு நாள் சூரிய பகவானுக்கு தெரியாமல் இந்திரலோகத்திற்கு செல்கிறார்.
இந்திரலோகத்தில் ஆண்களை உள்ளே விட மாட்டார்கள் என்பதற்காக பெண்ணாக மாறி உள்ளே செல்கிறார்
தன் பெயர் அருணா தேவி என்றும் மேனகாவின் தோழி என்றும் அறிமுகம் செய்கிறார்.
மேனகாவின் நடனத்தை பார்த்து ஆசைதீர ரசிக்கிறார்.
இது தெரியாத இந்திரன் அருணா தேவி மீது காதல் வயப்படுகிறார்.
விளைவு இந்திரன் மூலமாக அருணனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறக்கிறது.
வந்த இடத்தில் இப்படி ஆயிற்றே என்று வருத்தப்படுகிறார்.
குழந்தையை மறைத்து வைத்துவிட்டு மறுநாள் சூரிய பகவானின் தேருக்கு தேரோட்டியாக செல்கிறார்.
அதை நினைத்து வருத்தமாக இருந்ததால் இதை கவனித்த சூரிய பகவான் ஏன் வருத்தமாக இருக்கிறாய்
அருணா?
என்று கேட்கிறார்.
சூரிய தேவனின் கேள்விக்கு பொய் சொல்ல முடியாமல் தான் அருணா தேவியாக மாறிய இந்திரலோகத்தில் நடந்ததை தெரிவித்தார்.
இந்திரனே மயங்கும் அளவிற்கு அழகாக தெரிந்தாயா அப்படி என்றால் அந்த உருவத்தை இப்போது எடுத்துக்காட்டு
என்றார்.
சூரியன் தேவன் கேட்கிறார் என்ற நம்பி உருமாறி காட்டினார். சூரிய தேவன் அருணாதேவி அழகில் மயங்கி உருவானது இன்னொரு ஆண் குழந்தை பிறக்கிறது.
சோகமடைந்த அருணன் இந்த இரண்டு குழந்தைகளை நான் எப்படி வளர்ப்பேன் என்று வருத்தப்படுகிறார்.
இதற்கு சூரிய தேவன் ஒரு உபாயம் சொல்கிறார்.
கிஷ்கிந்தை ஆட்சி செய்து வரும் ஒரு வானர அரசன் என்னை நோக்கி பல ஆண்டுகளாக குழந்தை வரம் கேட்டு தவம் செய்து கொண்டிருக்கிறார்.
அவரிடம் இந்த இரண்டு குழந்தைகளையும் அவரின் இனமான வனரங்களாகவே மாற்றி கொடுத்து விட்டால் அவர் வளர்த்துக் கொள்வார் என்கிறார்.
அதன்படியே கிஷ்கிந்தை ராஜாவிடம் ஒப்படைகிறார்கள். இப்படி ஒரு ஆண் தாய்க்கும் இரண்டு வெவ்வேறு தந்தைக்கும் பிறந்தவர்கள் கிஷ்கிந்தை ராஜாவிடம் ஒப்படைக்கப்பட்ட
குழந்தைகள் தான் வாலி, சுக்ரீவன்.
Comments
Post a Comment