மகாபாரத கிளைக் கதை -4- விதி

விதி

சிவபெருமானை ஒரு முறை சந்திக்க எமதர்மராஜா வந்தார் அப்பொழுது வாயிலில் ஒரு சின்ன சிட்டுக்குருவி அமர்ந்திருந்தது.  சிறிது நேரம் அதை உற்று நோக்கி இருந்த எமதர்மராஜா யோசனையுடன் உள்ளே நுழைந்தார்.  இதையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த ஒரு கழுகு சிட்டுக்குருவியின் மீது எமதர்மராஜாவின் பார்வை விழுந்துவிட்டது. எனவே அதற்கு இறப்பு நிச்சயம் ஏற்பட்டுவிடும் என்று அச்சப்பட்டு அந்த சிட்டுக்குருவி தனது கால்களால் ஏந்திக்கொண்டு வெகுதூரம் உள்ள ஒரு மலைப்பகுதிக்கு சென்று அங்கே ஒரு  மரத்தில் உட்கார வைத்துவிட்டு வந்து விட்டது.

 எமதர்மராஜா சிவபெருமானை சந்தித்து விட்டு வெளியே வந்து சிட்டுக்குருவி எங்கே என்று பார்த்தார். அப்போது அந்த கருடன் சிட்டுக்குருவியா தேடுகிறீர்கள் நீங்கள் அதை அழிக்க முடியாது அது வெகு தொலைவுக்கு சென்று விட்டது என்றார் அட முட்டாளே இங்கிருந்து இந்த சிட்டுக்குருவி வெகு தொலைவில் இருக்கக்கூடிய ஒரு மரத்தின் அடியில் இருக்கக்கூடிய ஒரு பாம்பினால் மரணம் என்று விதி இருக்கிறதே இது எப்படி இந்த சிட்டு குருவி அவ்வளவு தூரம் பறந்து செல்லும் என்று யோசித்தபடியே இந்த சிட்டுக்குருவியை நான் பார்த்தேன்.
 நீயே அதன் சாவிற்கு காரணமாக இருந்து விட்டாயே என்று சொன்னாராம்.

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(27) - திரௌபதி

மகாபாரத கதாபாத்திரங்கள்(6) - திருதராஷ்டிரன்

மகாபாரத கதாபாத்திரங்கள் (9)- சித்ராங்கதன்