மகாபாரத கிளைக் கதை -5- சனீஸ்வரன் பெயர் காரணம்

சனீஸ்வரன் பெயர் காரணம் 

ஒருமுறை சனி பகவான் தேவலோகத்தை கடந்து கைலாயத்திற்கு வந்து கொண்டிருந்தார் இதை பார்த்த தேவர்கள் சனி பகவான் என்று யாரை பிடிக்கப் போகிறார்கள் என்று அச்சத்துடன் பயந்தனர். தேவலோகத்தை கடந்து சனி பகவான் கைலாயத்துடன் நுழைந்தார் சனி பகவான்.

 கைலாயத்துக்குள் வருவதை அறிந்த சிவன் தன்னைத்தான் பிடிக்க வருகிறார் என்று யோகித்துக்கொண்டு வெகு தொலைவில் இருக்கக்கூடிய ஒரு குகை மலையில் சென்று குகைக்கு உள்ளே சென்று பகுகையை மூடினார் பின் தவத்தில் ஈடுபட்டார் ஏழரை ஆண்டு காலம் கழித்து வெளியே வந்த போது சனி பகவான் வெளியே காத்திருந்தார்.

 பார்த்தாயா உன்னுடைய படியிலிருந்து நான் தப்பித்து விட்டேன் என்று சிவபெருமான் கூறினார் அதற்கு சனி பகவான் ஐயா நான் உங்களை ஏற்கனவே பிடித்து விட்டேன். அதனால் தான் ஏழரை ஆண்டு காலம் இந்த குகையில் உங்கள் மனைவியான பார்வதி தேவியை பார்க்காமல் நீங்கள் தனிமையில் இருந்திருக்கிறீர்கள் என்று தெரிவித்தார் .

கடவுள் என்ற பிறகும் நீ உன் பணியை சரியாக செய்திருக்கிறாய் அதனால் இனி என்னுடைய பெயர் உனக்கு உன்னுடைய பெயரோடு சேர்ந்து இருக்கும் சனி என்ற உன்னுடைய பெயரோடு சனீஸ்வரன் என்று இன்றிலிருந்து நீ அழைக்கப்படுவாய் என்று பாராட்டினார்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(27) - திரௌபதி

மகாபாரத கதாபாத்திரங்கள்(6) - திருதராஷ்டிரன்

மகாபாரத கதாபாத்திரங்கள் (9)- சித்ராங்கதன்