மகாபாரத கதாபாத்திரங்கள்- சத்தியவதி பிறப்பு

சத்தியவதி பிறப்பு

உபரிசரன் என்ற அரசன் ஒரு நாள் வேட்டை முடிந்து ஒரு மரத்தின் அடியில் ஓய்வு எடுத்த போது தன் மனைவின் நினைவுகளோடு இருக்கையில் அவரிடமிருந்து சுக்லம் வெளிபட்டதை ஓர் இலையில் சேகரித்து ஒரு கிளியிடம் கொடுத்து தன் மனைவியிடம் கொடுக்கச் சொன்னான்.
அதை எடுத்துக் கொண்டு கிளி பறந்த போது கிளியை ஒரு பருந்து தாக்கும்போது, இலையிலிருந்த சுக்லம் கடலில் விழுந்து விட்டது. அதை ஒரு மீன் உண்டு விடுகிறது. அந்த மீன் பிரம்மாவின்  சாபத்தால் மனித குழந்தை பெறும் வரை மீனாக இருக்கும் ஒரு அப்ஸரஸ் கன்னி.
சில நாட்களுக்குப் பின்  மீனவர்கள் அந்த மீனை பிடித்தபோது அதன் வயிற்றில்  இரண்டு குழந்தைகள் இருக்கக் கண்டு மன்னன் உபரிசரனிடம் கொடுத்தனர். ஆண் குழந்தையை எற்றுக் கொண்டு, பெண் குழந்தையை மீனவர்கள் வசம் வளர்க்க கூறிவிட்டார். அந்த மீனவத்தலைவன் சத்தியவதி என்றே அழைத்து வந்தான். அவளிடமிருந்து மீன் வாடை வீசியதால் மத்சகந்தி என்ற பெயரும் அவளுக்கு உண்டு.
           **************





Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி