மகாபாரத கதாபாத்திரங்கள்- ஜமதக்கனி, பரசுராமர் பிறப்பு

ஜமதக்னி, பரசுராமர் பிறப்பு

பிருகுமுனிவரின் வழித்தோன்றலான ரிசிகமுனி,  காதி அரசின் மகளான சத்தியவதியை மணக்க விரும்பினார்.

கடும் அந்தணர் தவ வாழ்வு வாழ்ந்த ரிஷிகமுனியே எங்களது இனத்தில் திருமணத்திற்கு என்று ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. பழுப்பு உடல், கருப்பு காது கொண்ட ஆயிரம் குதிரைகளை நீ தந்தால் என் மகள் சத்தியவதியை உமக்கு மனம் முடித்து தருவேன் என்று காசி அரசன் கூறினார்.

 பிருகுவின் வழிதோன்றலான ரிசிகமுனி, வருணனிடம் வேண்டி பழுப்பு உடல், கருப்பு கொண்ட ஆயிரம் குதிரைகளை பெற்றான்.
 கங்கை நதியில் இருந்து 1000 குதிரைகள் எழுந்து வந்தது.
காசி கேட்டதுபோல் ஆயிரம் குதிரைகளை அளித்து சத்தியவதியை ரிசிகமுனி மணந்தார் .

ஒருமுறை பிருகு முனிவர் இவர்களின் குடிலுக்கு வந்தபோது சத்தியவதியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.

 எனக்கும் என் தாய்க்கும் ஒரு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டாள்.

  நீ அத்தி மரத்தையும் உன் தாய் அரச மரத்தையும் சுற்றவேண்டும்.
 இந்த குவளையில் உள்ள அரிசி பால் உணவை நீ உண்ண வேண்டும் என்றும்
வேறு ஒரு குவளை கொடுத்து உனது தாய் அதை உண்ண வேண்டும் என்று கூறிவிட்டுச் சென்றார்.
 சத்தியவதியும் அவள் தாயும்  மரங்களையும் அரசி பால்குடங்களையும் மாற்றிக் கொண்டனர்.

பிறகு பிருகு முனிவர் ஞானத்தால் அறிந்து கொண்டார்.

சத்தியவதியே
நீங்கள் இருவரும் செயல்முறைகளை மாற்றிக் கொண்டதால் உன் மகன் பிராமணர் குலத்தில் உதித்தாலும் புரோகிதர்களின் ஞானம் பெற்றாலும் போர்க்கலையில் வல்லவனாக திகழ்வான்.

 உன் தாய்க்கு சத்திரிய மகன் பிறந்தாலும் அவன் புரோகித வாழ்வை மேற்கொள்வான் என்று தெரிவித்தார்.

 அப்போது சத்தியவதி என் மகனுக்கு இந்த நிலை வேண்டாம் என் பேரனுக்கு இந்த நிலையை தாருங்கள் என்று வேண்டினாள். அதன்படி சத்தியவதிக்கு பிறந்த மகனே ஜமதக்கனி ஜமதக்னியின் மகனே பரசுராமர் சத்தியவதியின் பேரன்.

பிருகு முனிவர் கூறியபடி புரோகிதங்களை கற்றாலும் பரசுராமர் போர்களையில் சிறந்து விளங்கினார்.

           *****************


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி