விஜயசக்தி சுயமதிப்பீட்டறிக்கை

சுயமதிப்பீட்டறிக்கை
(04 10.2018 to 16.07.2021)

திருமதி.ஏ.விஜயசக்தி BA.,BLIS.,HDCM                                                       

இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர்

துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம்,

கோவை.

தேதி 16.07.2021 

***************************************

 04.10.2018 ஆம் தேதி முதல் 16.07.2921 வரை இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநராக துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனத்தில் பணியாற்றினேன்   நான் மேற்காண் ஸ்தாபனத்தில் பணியில் சேர்ந்த நாள்முதல்  மேற்கொண்ட நடவடிக்கைகள் இங்கே பதிவிடுகின்றேன். 

  1. நிறுவனத்தின் வியாபாரம் சார்ந்த பணிகள் :

  • நிறுவனத்தின் வியாபார மேம்பாடு கருதி தமிழகம் முழுவதும் மத்தியக்கூட்டுறவு வங்கியில் உரக்காசுக்கடன் பதிவாளரிடம்  அனுமதி பெறப்பட்டுள்ளது.

  •  04.10.2018       அன்று.         கடன் நிலுவை ரூ79.97/- கோடியில் இருந்து  31.03.2021 அன்று ரூ.60/- கோடி உயர்ந்து ஸ்தாபன வங்கிபிரிவு கடன் நிலுவை ரூ.140.15 கோடியாக உயர்ந்துள்ளது

  • .04.10.2018 அன்று வைப்புத்தொகை நிலுவை ரூ.112/- கோடியில் இருந்து  31.03.2021 அன்று ரூ.19/- கோடி உயர்ந்து ஸ்தாபன வாங்கிப் பிரிவு வைப்புத் தொகை நிலுவை ரூ.131 கோடியாக உயர்ந்துள்ளது.

  • ஸ்தாபன உரப்பிரிவினை மேற்கூரையுடன் கூடிய கிடங்கினை விரிவுபடுத்தும் பொருட்டும், புதிதாக கலப்புரத் தயாரிப்பு இயந்திரம் மற்றும் வேப்பம்புண்ணாக்கு நவீன அரவை இயந்திரம் கொள்முதல் செய்யும் பொருட்டும் தேசிய வேளாண் அபிவிருத்தி திட்டத்தின்கீழ் (NADP)  100 % மானியத்துடன் ரூ.30.50 இலட்சம் நிதியுதவி பெற்றிட உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது  


  • 2019-20 ஆண்டில் வியாபார பிரிவில் நிறுவன வரலாற்றிலேயே சரித்திர சாதனையாக உரப்பிரிவில் 10356 டன்களை உற்பத்தி செய்தும்,  அதனை ரூ.14 கோடி அளவில் விற்பனை செய்து வரலாற்று சாதனை  படைத்துள்ளது.


     * டியூகாஸ் நிறுவன வளாகத்தில்  HPCL நிறுவனத்துடன் இணைந்து பெட்ரோல் பங்க் ஒன்று நடத்தப்பட்டுவருகிறது. நிறுவன இடத்தில் செயல்படும் இந்த பெட்ரோல் பங்க் இட வாடகையாக   கடந்த ஆண்டுகளில் மாதம் ரூ9,000/-பெறப்பட்டடிருந்ததை மாதம்  டரூ 1,50,000/- ஆக உயர்ந்தி பெறப்பட்டு உள்ளது. இது நிறுவனத்திற்கு வருடத்திற்கு கூடுதலாக ரூ17,00,000/- வருமானம் ஈட்ட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

* மேலும் நிறுவன பெட்ரோல் பங்க் பிரிவில் 2018-19 ஆண்டிற்கான மண்டல வாரியான அதிக விற்பனைக்கான இரண்டாம் பரிசு வழங்கி கௌரவித்தனர்.



  • டியூகாஸ் நிறுவனத்தில் நான் பதவியேற்ற 04.10.2018ம் தேதிக்கு பின்பு  புதியதாக தொடங்கப்பட்ட பிரிவுகள் பின்வருமாறு


        வேப்பம்புண்ணாக்கு உற்பத்திப் பிரிவு ( துவக்கம் - 12-06-2019)

தமிழகத்திலேயே கூட்டுறவுத்துறையில் முதன்முதலாக வேளாண் துறையின் அனுமதி பெற்று தரமான வேப்பம் புண்ணாக்கு தயாரிப்பு பணி கடந்த ஜூன் 2019 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக துவங்கப்பட்டது. இங்கு உலர்ந்த வேப்பம்பழக்கொட்டையிலிருந்து எண்ணெய் எடுக்காமல் மேற்படி வேப்பம்பழக்கொட்டையினை நேரடியாக அரைத்து தூளாக்கி விற்பனை செய்யப்படுகிறது. இதன் தூய்மை மற்றும்  தரம் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளதால் அறிமுக ஆண்டிலேயே  400 டன்கள் உற்பத்தி செய்து சாதனை படைத்துள்ளது

.WhatsApp Image 2020-09-24 at 3

                நுண்ணூட்டச்சத்து கலவை உரப்பிரிவு ∶ (துவக்கம் – 15/11/2019)

தமிழகத்திலேயே கூட்டுறவுத்துறையில் முதன்முதலாக வேளாண் துறையின் அனுமதி பெற்று தரமான முறையில் நுண்ணூட்டச்சத்து கலவை உரம் தயாரிப்பு பணி கடந்த நவம்பர் 2019 ஆம் ஆண்டு முதல் வெற்றிகரமாக துவங்கப்பட்டது. இங்கு போரான்,பெர்ரஸ் சல்பேட், ஜிங்க் சல்பேட், மெக்னீசியம் சல்பேட், மாங்கனீசு சல்பேட் போன்ற  நுண்ணூட்டச்சத்துக்களை கொண்டு தென்னை,வாழை மற்றும் நெல் ஆகிய பயிர்களுக்கு ஏற்றவாறு கலந்து தரமான முறையில் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இதன் தரம் மற்றும் பயிர்களின் உயர் விளைச்சல் காரணமாக விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. 

TWI01146

                    நீரா பானம் விற்பனை  (துவக்கம் – 06/03/2019)

தென்னையிலிருந்து பெறப்படும் மதிப்புக்கூட்டப்பட்ட பொருளிலேயே மிக தூய்மையான ஆரோக்கியம் நிறைந்த நோய் எதிர்ப்பு சக்தி கொண்ட நீரா பானம்  உறுப்பினர்கள் மற்றும் பொது மக்களின் பயன்பாட்டிற்கு தென்னை உற்பத்தியாளர்கள் சங்கத்திலிருந்து நேரடியாக கொள்முதல் செய்து இலாப நோக்கமின்றி சமூக அக்கரையுடன் விற்பனை செய்து வருகின்றோம்.

WhatsApp Image 2020-10-14 at 12

                     செக்கு எண்ணெய்கள் பிரிவு ∶ (துவக்கம்-15/11/2019)

விவசாயிகளின் பொருளாதார மேம்பாடு கருதி அவர்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கும் பொருட்டு விவசாயிகளின் விளைபொருளான நிலக்கடலை, எள், கொப்பறை போன்ற பொருட்களைக் நேரடியாக கொள்முதல் செய்து ஆரோக்கியமான சமுதாயத்தை  உருவாக்கும் உன்னத நோக்கத்தோடு விவசாய சேவா நிறுவனத்தை சமுதாய சேவைக்கு கொண்டு செல்ல ஆரம்பிக்கப்பட்ட செக்கு எண்ணெய் பிரிவு பல்வேறு தரப்பினரும் விரும்பி வாங்குகின்ற தரமான தரத்துடன் கூடிய சமையல் எண்ணெய்கள் தயாரிக்கப்படுகிறது. 

TWI01169

                     ஆவின் பாலகம் (துவக்கம் – 16/11/2019)

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தயாரிப்பு நிலையமான ஆவின் கூட்டுறவு பால் விற்பனையகத்தின் நேரடி முகவராக செயல்பட்டு ஆவின் பால் பொருட்களான தயிர்,நெய்,வெண்ணெய், இனிப்பு வகைகள் போன்றவற்றை துடியலூர் கிராம எல்லையில் உள்ள உறுப்பினர்கள் மற்றும் வாடிக்கையாளர்களுக்கு விற்பனை மேற்கொண்டு வருகின்றோம்.

TWI01212


                உடையாம் பாளையம் வங்கிக்கிளை (துவக்கம்-16/09/2019)

     ஸ்தாபன செயல் எல்லையான உடையாம்பாளையாம் பகுதியில் ஸ்தாபன வங்கிப் பணிகளை விரிவுபடுத்தும் நோக்கத்தோடு உறுப்பினர்களிடமிருந்து வைப்புகளைப் பெறுதல், கடன் வழங்குதல் உள்ளிட்ட வங்கிப் பணிகளை  செயல்படுத்திட  நிறுவனத்தின்        9வது கிளையாக துவங்கப்பட்டுள்ளது.

தற்போது இந்த கிளையின் கடன் நிலுவை 5.25 கோடியும் வைப்புத் தொகை நிலுவை 2.61 கோடியுடனும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.


 


  1. நிறுவனத்தின் வியாபாரம்  சாராத பணிகள்:


  • நிறுவனத்தின் பணியாளர்களுக்கு 7வது ஊதியக்குழுவினை    

     பதிவாளர்   அவர்களின்               அனுமதி பெற்று            அமல்படுத்தித் தந்தது.


  • பணியாளர்களின் வீட்டுக்கடன் உச்ச வரம்பு 1 இலட்சத்திலிருந்து 10 இலட்சமாக உயர்த்திட பதிவாளர் அவர்களிடம் அனுமதி பெற்றுத்தந்தது.


  • கொரொனா ஊரடங்கு காலகட்டத்திலும் கூட ஸ்தாபனத்தின் எந்தவொரு செயல்பாடும் பாதிக்காவண்ணம் உறுப்பினர்களுக்கு வங்கிப்பணி மற்றும் விவசாய வியாபாரப்பணியுடன், பொதுமக்களுக்கு நடமாடும் காய்கறி விற்பனை நிலையம் மூலமா சிறப்பானதொரு சேவையினை தடையின்றி வழங்கச் செய்தல்.


  • நமது ஸ்தாபன வணிக வளாகத்தில் கடந்த 7 ஆண்டுகளாக வாடகை தராமல் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த தனியார் மருந்துக்கடையினை உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆக்கிரமிப்பை அகற்றி ஸ்தாபன சொத்தை மீட்டெடுத்தது 

   


      * துடியலூர் கூட்டுறவு நிறுவன வாயில் அருகில் பல வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்திருந்த  கடையை நீக்க நடவடிக்கை மேற்கொண்டு அகற்றப்பட்டது. மேலும் அகற்றப்பட்ட இடத்தில் நிறுவன விளம்பரப் பலகை வைக்கப்பட்டுள்ளது.



  • கொரோனா காலகட்டத்தில் பணியாளர்களின் நலன் கருதி      தினந்தோறும் நெல்லி,இஞ்சி,புதினா,துளசி ஆகியவை அடங்கிய  சத்து பானத்தை கடந்த 9 மாதங்களாக பணியாளர்களின் நோய் எதிர்ப்பு சக்தியினை  அதிகரித்திட வழங்கச் செய்தல். 


  • ஸ்தாபன பணியாளர்களின் பணித்திறன் மற்றும் மன வலிமை மேம்பட கொரொனா ஊரடங்கு காலத்தில் அலுவலக வளாகத்திலேயே TNP நூலகம் அமைக்கப்பட்டுள்ளது.


                     


  • பணியாளர்களின் ஆரோக்கியத்தினை காத்திட அலுவலக வளாகத்தில் பயன்பாடற்று கிடந்த முற்புதர் நிறைந்த இடங்களை தூய்மை செய்து இறகுப்பந்து,கைப்பந்து, கூடைப்பந்து மைதானம் அமைக்கும் பொருட்டு அலுவலக வளாகம் சுத்தப்படுவதோடும், பணியாளர்களும் அலுவலக நேரம் தவிர்த்து காலை ,மாலை நேரங்களில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ளவும் வழிவகுக்கப்பட்டுள்ளது .


  • ஸ்தாபனத்தின் ஒப்பந்த, தற்காலிக மற்றும் நிரந்தர பணியாளர்கள் என சுமார்  150 பேர் மற்றும் வங்கி, வியாபார பிரிவு வாடிக்கையாளர்கள்  ஆகியோர்களுக்கு ஓர் நல்ல உணவு வகைகளை வழங்கிட ஏதுவாக இருக்கும். பல்வேறு வகையான சேவைகளை ஆற்றுகின்ற நமது நிறுவனம் தேநீர் மற்றும் உணவு வகைகளை பணியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருக்கும் வழங்கிட மேற்படி மருந்துக்கடை இடத்தில் புதியதொரு     ’டியூகாஸ் கேண்டீன்’ அமைக்கப்பட்டுள்ளது.



பணியாளர்களின் திறம் மேம்படச்செய்தல்:


  •  ஸ்தாபன பணிநிலைத்திறனில் 111 பணியாளர்கள் என்ற நிலையில் தற்சமயம் 42 பணியாளர்களைக் கொண்டு செயல்பட்டு வருகின்ற நிலையில், டியூகாஸ் பணியாளர்களது மன அழுத்தத்தை குறைக்கும் வகையில் யோகாசன பயிற்சி வழங்கியது.




  • ஸ்தாபன பணியாளர்களின் உடல் ஆரோக்கிய மேம்பட அலுவலக நேரம் தவிர்த்து காலை மற்றும் மாலை வேலைகளில் விளையாட்டு பயிற்சி மேற்கொள்ள இறகுப்பந்து, கைப்பந்து, கூடைப்பந்து, உள்விளையாட்டு அரங்கம் போன்ற மைதானங்களை அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது.


 

  • ஸ்தாபன வளாகத்தில் இயற்கை எழில் கொஞ்சும் வகையில் பறவைகளின் ரீங்கார சத்தம் பணியாளர்களின் பணிப்பழுவினை குறைத்திட பறவைகளுக்கும் உணவருந்தி களைப்பாற பறவைகள் சரணாலயம் அமைத்துத் தந்தது.



  •   பணியாளர்களுக்கு மதிய உணவினை உண்பதற்கு உரிய இட வசதி இல்லாத நிலையில் அலுவலக மாடியில் அனைத்து பணியாளர்கள் மற்றும் ஸ்தாபனத்திற்கு வரும் விருந்தினர்கள் அமர்ந்து உணவருந்தக்கூடிய வகையில் பிரத்யேக உணவுக்கூடம் (EXCLUSIVE FOOD COURT) .


                         



  • நிறுவன பணியாளர்களின் நலனே நிறுவனத்தின் வளர்ச்சி என்பதன் அடிப்படையில் அவ்வப்போது பணியாளர்களை

  • நீலகிரி கூட்டுறவு விற்பனை சங்கம்,தெங்குமரஹடா கூட்டுறவு சங்கம், 

  • தூத்துக்குடி துறைமுக தொழிற்பயிற்சி, 

  • ஸ்ரீராமகிருஷ்ணா வித்யாலயா பயிற்சி வகுப்பு ஆகிய  பகுதிகளுக்கு பணியாளர்களை நேரடியாக அழைத்துச்சென்று உற்சாகப்படுத்தும் பொருட்டும், புத்துணர்வு பெரும் பொருட்டும், பயிற்சி பட்டறை வகுப்புக்களை நடத்தியும் சுற்றுலா செல்ல அனுமதி அளித்தும், ஆண் பணியாளர்களுக்கு ஆண்கள் தினமும், பெண் பணியாளர்களுக்கு மகளிர் தினமும் 

  • சர்வதேச சர்வதேச கூட்டுறவு தினம் ஆகிய விழாக்கள் மூலம்  பணியாளர்களை உற்சாகப்படுத்தப்பட்டு வருகிறது




  1. நிறுவனம் சார்ந்த சமூக சேவைகள்:


  • ஸ்தாபனத்தின்   வாயிலாக நிறுவனங்களின் (Sponsors) பங்களிப்புடன் கொரொனா தடுப்பு நடவடிக்கையாக பணியாளர் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க  கபசுர குடிநீர் பொடி இலவசமாக வழங்கியது. மேலும் நிறுவன வாடிக்கையாளர்கள், கோவை மாவட்ட கூட்டுறவு சங்க பணியாளர்கள் அனைவருக்கும் இலவசமாக வழங்கியது.



               



  • கொரொனா ஊரடங்கு கால கட்டத்தில் ஸ்தாபன செயல்    

     எல்லையில் உள்ள கிராம பொதுமக்களின் வாழ்வாதாரம் காத்திட             

     விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து அந்தந்த 

     கிராமங்களுக்கு நேரில் சென்று வாகனம் மூலம் இலாப 

     நோக்கமின்றி நடமாடும்  மலிவு விலை காய்கறி விற்பனை 

     மேற்கொண்டபோது:-


WhatsApp Image 2020-10-14 at 11 

  • கல்லூரி மாணவர்களின் எதிர்கால நலன் கருதியும், டியூகாஸ் பணியாளர்களின் பணித்திறனை மேம்படுத்திட ஸ்ரீராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தம் வாயிலாக பணியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சியினை கல்லூரி நிர்வாகமும், மாணவர்களின் தொழிற்பயிற்சியினை வழங்கிடும் டியூகாஸ் நிர்வாகமும் மேற்கொள்ள வழிவகை செய்யப்பட்டது.

 

                    WhatsApp Image 2020-10-14 at 12  


  •   நமது மத்திய அரசின் பிரதம மந்திரி தூய்மை இந்தியா திட்டத்தின் SWATCH BHARAT SCHEME)  திட்டத்தின் மூலம் டியூகாஸ் நிறுவன பணியாளர்களும் ஸ்ரீராமகிருஷ்னா மிஷன்  வித்யாலயா மாணவர்களும் இணைந்து சமுதாயத்தை உயர்த்திடும் நோக்கோடு ஸ்தாபன முன்னாள் தலைவர் டி.என்.பி. அவர்களின் கிராமமான அப்பநாயக்கன் பாளையம் கிராமத்தில் அங்கன்வாடி மையத்தை தூய்மை செய்து சுவர்களுக்கு வெள்ளை அடித்து, மேற்படி கிராமத்தில் பசுமை இந்தியா திட்டத்திற்கு வித்திடும் வகையில் மரக்கன்றுகளை நட்டும், கிராமங்களில் உள்ள தெருக்களை பசுமை தூய்மை பணி மேற்கொள்ளச் செய்தல்.

            swa2   sw3

  • ஆண்டுதோறும் கொங்கு மண்டலத்தில் உள்ள கல்லூரிகளில் இருந்து மாணவ மாணவியர்கள் சுமார் 500க்கும் மேற்பட்டோர் ஸ்தாபனத்திற்கு வருகை புரிந்து இதன் செயல்பாட்டினை அறிந்துகொள்ள வந்து செல்கின்றனர். இவர்களுக்கு ஸ்தாபனத்தின் தோற்றம், வரலாறு மற்றும் பிற செயல்பாடுகள் குறித்து விரிவாக அறிந்திடும் வகையில் குறும்படம் தயாரிக்கப்பட்டது.  இந்த ”டியூகாஸ் ஆவணப்படம் வெளியீட்டு விழா” அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழாவில் மாண்புமிகு ஊரக வளர்ச்சி மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி மற்றும் செய்லாக்கத்துறை அமைச்சர் அவர்களால் வெளியிடப்பட்டது ..இதனை Tucas YouTube channel ஆரம்பித்து பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.


WhatsApp Image 2020-10-15 at 11

  
      * கொரானா தடுப்பு நடவடிக்கைகளில் ஊரடங்கு அமலில் இருந்தபோதும் கூட்டுறவுத் துறை மற்றும் கூட்டுறவுச் சங்கப் பணியாளர்களின் சேவையை பாராட்டி TUCAS ஒரு குறும்படம் தயாரித்து வெளியிட்டது.
     *ஸ்தான வளாகத்தில் அமைந்துள்ள செல்வ விநாயகர் திருக்கோயில் குடமுழுக்கு விழா நடத்தப்பட்டது.

      * ஸ்தான கடன் நிலுவை 100 கோடி உயர்வு ஏற்பட பாடுபட்ட பணியாளர்களுக்கு சிறப்பான புத்தாண்டு நிகழ்ச்சி 2020 கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டது.
  • ஸ்தாபன எல்லையிள்ள அரசு பள்ளிகளுக்கு பீரோ, மற்றும் தண்ணீர் டேங்குகள் உள்ளிட்ட தேவைப்படும்  பொருட்கள் ஆகியவற்றை ஸ்தாபனம் ( A உறுப்பினர்கள் வழங்கியுள்ள பங்கு ஈவுவட்டி மூலமாக) குழந்தைகள் நலன் கருதி அரசுப் பள்ளிக்குழந்தைகளை ஊக்குவிக்கும் பொருட்டு ஆண்டுதோறும் இலவசமாக வழங்கி வருகின்றோம்.



         * விவசாயிகள் மற்றும் பொது மக்களுக்கு  “இலவச மருத்துவ முகாம் “ ஏற்பாடு செய்து நடத்தப்பட்டது.


         * பணியாளர்கள் சமூக நலன் தெரிந்து கொள்ளும் பொருட்டு நிறுவன பணியாளர்களுடன் பொங்கல் விழா ஆதரவற்ற குழந்தைகள் இல்லத்தில் கொண்டாடப்பட்டது.


  1. நிறுவனம் சாராத சமூக சேவைகள்:

  • கோவை மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லுரிகளில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு  வாழ்விலும், தேர்விலும் வெற்றி பெறவும் மனதைரியத்துடன் வாழ்வினை அனுகவும்  புத்தாக்கப் பயிற்சியினை அவ்வப்போது வழங்கி வருகின்றேன்.

  

                

                  

  • கொரொனா நோய் தொற்று பேரிடர் காலத்தில் நிறுவனத்தின் மூலமாகவும், தனிநபராகவும் நின்று பொதுமக்களுக்கு சேவை வழங்கிய நிர்வாகத்திறனுக்காக HDFC  வங்கியினரால்                              OUR NEIGHBOURHOOD HEROES என்ற பாராட்டு மடல் வழங்கி சிறப்பிக்கப்பட்டது..

             

  • கொரொனா நோய் தொற்று பேரிடர் காலத்தில் சாமானிய மக்கள் அன்றாட உணவுக்கு வழி தெரியாத சூழ்நிலையில் நிதியுதவி பெற்று பேரன்பு அறக்கட்டளை வாயிலாக பொதுமக்களுக்கும், சுகாதாரத்துறை, காவல் துறை மற்றும் வருவாய்த்துறை பணியாளர்களுக்கும் உணவளிக்கப்பட்டதைத் தொடர்ந்து எனது சேவையை பாராட்டி (PERANBU FOUNDATION)  மூலம் எனக்கு பாராட்டு மடல் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.


       





  • இதனை தொடர்ந்து தன்னம்பிக்கை மாத இதழில் ”வாழ்வியல் கலை” என்ற  தலைப்பில் மாதம் ஒரு கட்டுரையாக இது வரை  கீழ்க்காணும் பாகம் 9 வரை வெளிவந்துள்ளது.

  • தன்னம்பிக்கை பத்திரிகை பக்கத்தில் எனது காணொளி பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது

பாகம் – 1 பெண்கள்

பாகம் – 2 பதின்பருவ துளிர் காதல்

பாகம் – 3 வெற்றியின் அவசியம்

பாகம் - 4 சமூக வேலிகள்

பாகம் – 5 குழந்தைகளுடன் பழகுதல்

பாகம் – 6 நண்பர்களை தேர்ந்தெடுத்தல்

பாகம் – 7 கனவுகளின் வலிமை

பாகம் – 8 மனசாட்சியுடன் ஒரு பயணம்

பாகம் – 9 மன அழுத்தத்தை உடைத்தெறிதல்.   

பாகம் -- 10 இறைநம்பிக்கை பற்றிய தெளிவு

     * மேலும் வாழ்வியலுக்கு தேவையான தலைப்புகளில் 

Audio பதிவுகள் (Self Esteem) மேற்கொண்டு வருகிறேன்.

  • அரசுப்பள்ளி மாணவர்கள் உயர் கல்வி பயிலவும், போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளவும், மேற்படி மாணவர்களை தயார்படுத்திட புத்தாக்க பயிற்சியுடன் தன்னம்பிக்கை ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகிறது.

  • சமுதாயத்தில் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களின் திறமையை வெளிக்கொணரும் பொருட்டும், இளைஞர்களின் தன்னம்பிக்கையினை தட்டி எழுப்பும் சமூகம் சார்ந்த மேடைப் பேச்சுகள் (MOTIVATIONAL CLASSES) மூலம் விழிப்புணர்வு வழங்கப்படுகிறது.

  • சமூகம் எதிர்கொள்ள வேண்டிய பிரச்சினைகளை பட்டிமன்ற விவாதத்தின் மூலம் சமுதாயத்திற்கு புத்துணர்ச்சி ஏற்படக்கூடிய ன் நல்லொழுக்க கருத்துக்களை எடுத்துரைத்து பட்டிமன்ற நடுவராகவும், பேச்சாளராகவும் இருந்து வருகின்றேன்.

 பட்டிமன்றம் YouTube link




  • சமுதாயத்தில் இன்றைய தலைமுறையினருக்கு பண்டைய புராணங்களான மகாபாரதம்  என்ற  இதிகாச காப்பியத்தில் வரும் 150க்கும் மேற்பட்ட கதாபாத்திரங்களின் பிறப்பு, தோற்றம், அதன் சிறப்பு ஆகியவற்றை தொகுத்து இணையத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

       

        நன்றி

                             திருமதி.ஏ.விஜயசக்தி

    இணைப்பதிவாளர்/மேலாண்மை இயக்குநர்

 துடியலூர் கூட்டுறவு விவசாய சேவா ஸ்தாபனம்

துடியலூர்,கோவை-34


 Mail id- 

vijayasakthijrcs@gmail.com





Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி