Posts

Showing posts from November, 2023

Poor Mindset and Rich Mindset

Poor Mindset and Rich Mindset Mindset A poor mindset and a rich mindset are not words about money, they are words about mindset. Few rich people may also be in a poor Mindset. Some poor people may also be in a rich mindset. Here, a rich mind-set is a mind-set that makes one rgrow more and more in life, and those who possess it continues to progress. So if you know what a rich mindset is and develop that mindset, you can grow in life.. Poor Mindset 1) Living with past memories 2) Hate the rich people. Thinking about making money is wrong 3) People full of negative thoughts 4) Always bemoaning what is not available 5)Staying in a bad mood for a long time which attracts bad 6) Lack of self-esteem 7) Reluctance to learn. Think that I know everything 8) Fear of failure and struck to move towards goals Rich mindset 1) Living in the present 2) Helping the poor as much as possible 3) Having full of positive thoughts 4) Satisfied with what they get 5) Staying in a happy mood for a long time whi

மன உளைச்சலை போக்கும் வழிமுறைகள்

மன உளைச்சலை போக்கும் வழிமுறைகள்  ( Healer Baskar அவர்களின் வீடியோவில் இருந்து எடுத்தது) 1) ஓய்வு எடுக்க கற்றுக் கொள்ள வேண்டும் (சும்மா இரு - Rest ) 2) நடனம் ஆடுங்கள் (Dance) 3) நமது கருத்துக்களை பகிர ஒரு துணையாவது வேண்டும்.(Sharing) 4) மற்றவர்களின் கருத்துக்களை கவனிக்க வேண்டும் ( Listening) 5)  தியானம் உடற்பயிற்சி செய்யுங்கள் 6) சுவாச பயிற்சி செய்யுங்கள்  7) மகிழ்ச்சியான மனநிலையிவ் இருங்கள். 8) நம்மை பற்றி சொல்பவர்களின் கருத்துக்களை மனதிற்கு கொண்டு செல்லக்கூடாது 9) நேர்மறை எண்ணங்கள் நேர்மறை சிந்தனை நேர்மறை வார்த்தைகளை பயன்படுத்துங்கள் 10) விபாசனா யோக வகுப்புகளுக்கு சென்று வாருங்கள்.

மனநிலை ( Mindset)

மனநிலை ( Mindset ) ஏழை மனநிலை ( Poor Mindset) பணக்கார மனநிலை ( Rich mindset ஏழை மனநிலை என்பதும் பணக்கார மனநிலை என்பதும் பணத்தை குறித்து சொல்லப்படும் வார்த்தைகள் அல்ல மனநிலை குறித்து சொல்லப்படும் வார்த்தைகள். இதில் பணக்காரர்களும் ஏழை மன நிலையில் இருப்பார்கள்.  ஏழைகளும் பணக்கார மனநிலை இருப்பார்கள்.  இங்கு மனம் சார்ந்த பணக்கார மனநிலை என்பது மேலும் மேலும் வாழ்வில் உயரச் செய்யும் மனநிலை ஆகும்    இதனை கொண்டிருப்பவர்கள் தொடர்ந்து முன்னேறிக் கொண்டே இருப்பார்கள்.   அதனால் பணக்கார மனநிலை என்பது என்ன என்பதை தெரிந்து கொண்டு அந்த மனநிலையை வளர்த்துக் கொள்ள வேண்டும். ஏழை மனநிலை ( Poor Mindset ) 1) இறந்த கால நினைவுகளுடனேயே வாழ்வது 2) பணக்காரர்களை வெறுப்பது. பணம் சம்பாதிப்பது தவறு என்று நினைப்பது  3) எதிர் மறை எண்ணங்கள் நிறைந்தவர்கள் 4) எப்போதும் கிடைக்காததை நினைத்து புலம்பிக் கொண்ட இருத்தல் 5)கெட்டதை ஈர்க்கும் உணர்ச்சிகளில் அதிக நேரம் பயணித்தல் 6) சுயமதிபபு இல்லாமல் இருத்தல் 7) கற்றுக் கொள்ள தயங்குவது. எல்லாம் எனக்கு தெரியும் என்ற எண்ணம்  8) தோல்வியை கண்டு துவளுதல், பயப்படுதல் பணக்கார மனநிலை ( Rich mi

கணவன் செய்யக்கூடாதவைகள்

கணவன் செய்யவே கூடாதவைகள்  ( செய்தால் பெண்கள் பேய் ஆட்டம் ஆடிவிடுவார்கள்) தாம்பத்ய வாழ்க்கையில் இருவரும் இணைந்து வாழ்ந்துவரும் சூழலில் கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கு ஒருவர் அச்சாணிகள். பெண்கள் உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்கள் ( Feeling oriented) ஆண்கள் முடிவுகள் ரீதியாக சிந்திப்பவர்கள் (  Solution oriented) எனவே பெண்கள் உணர்வு பூர்வமாக சிந்திப்பவர்கள் என்பதால அவர்களிடம் நடந்து கொள்ள கூடாதவைகள்    அப்படி கணவன் நடந்து கொண்டால் மனைவி இராட்சசி போல் ஆவதற்கான வாய்ப்புகள் அதிகம். 1) சுவாரஸ்யமற்ற வாழ்க்கை சூழலில் குடும்பத்தை வைத்திருந்தால் ........... 2)  மனைவியில் நல்ல விஷயங்களை பாராட்டாமல் கெட்ட விஷயங்களை மட்டும் பெரிது படுத்தி குறை கூறிக் கொண்டே இருந்தால்............ 3 )  மனைவியை குடும்பத்தில் தனக்கு சமமாக நடத்தாமல் அடிமையாக நடத்தினால்............. 4) மனைவியை சமாதானம் செய்ய தெரியாவிட்டால்............ 5) மனைவியை மன்னிக்கும் தன்மை இல்லாவிட்டால் ......... அவமரியாதையாக நடத்தினால்.......... 6) கணவன் மன நோயாளியாக இருந்தால்....... 7)  மனைவியை குடும்பம் சார்ந்த முடிவுகளின் போது கலந்தாலோசிக்காவிட்டால

நல்ல பழக்கங்கள்

நல்ல பழக்கங்கள் உடல் சார்ந்த சில நல்ல பழக்கங்கள் காலை எழுவது, காலைக்கடன் கழிப்பது, குளியல், ஆயில் புல்லிங் தியானம்,மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி செய்தல் உடலையும் மனதையும் கெடுக்கும் விஷயங்களை பழக்கமாக்கிக் கொள்ளாமல் இருத்தல். பசிக்கும் போது ஆரோக்கியமான உணவு உட்கொள்ளுதல், தாகம் எடுக்கும் போது முழுமையாக நீர் அருந்துதல். ( பெரும்பாலான நேரங்களில் வீட்டில் சமைத்த உணவை உட் கொள்ளுதல்) குடும்பம் அலுவலகம் சார்ந்த கடமைகளை செய்தல். குடும்பத்தினருடன் சிரித்து பேசி மகிழ்தல், ஒன்றாக இரவு உணவு அருந்துதல். உறக்க செல்ல 2 மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்தல் மனம் சார்ந்த சில நல்ல பழக்கங்கள் நேர்மறை எண்ணங்கள் நேர்மறை சிந்தனை நேர்மறை வார்த்தைகளை பயன்படுத்துதல். எண்ணம் சொல் செயல் ஒரே நேர்கோட்டில் இருத்தல் நல்லவற்றை ஈர்க்கும் உணர்வுகள் அதிக நேரம் இருத்தல் கெட்டவற்றை ஈர்க்கும் உணர்வுகளில் இருந்து உடனடியாக வெளியேறுதல் உணர்வுகள் தோன்றி மறையும் தன்மை கொண்டது. எனவே எல்லா உண்மைகளையும் உணர்ச்சிகளாக மாற்றாம் இருத்தல். மற்றவர்கள் மீது பொறாமை, புறம் பேசுதல், போன்றவற்றால் எந்த நன்மையும் விளையாது என்ற ஆழ்ந்த புரிதல் இர

மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள்

மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள் ஒரு மனிதன் உடல் சார்ந்த கெட்ட பழக்கங்களோ அல்லது மனம் சார்ந்த கெட்டப்பழக்கங்களோ ஏதேனும் ஒன்றில் இருப்பான் அல்லது அவற்றில் இருந்து தெளிந்து வெளியே வந்திருப்பான். உடல் சார்ந்த கெட்ட பழக்கங்களை பற்றியே அனைவரும் கவலைப்படுகிறார். தவறு என்று பேசுகிறோம். மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள் தான் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கெட்ட பழக்கங்கள். உடல் சார்ந்த கெட்ட பழக்கங்கள் நமக்கு எப்போது கெட்ட பழக்கம் என்று தெரிகி. றதோ அப்போது அதனை விடுவதற்கான முயற்சியை பெரும்பாலுனோர் மேற்கண்டு அதிலிருந்து வெளி வர முயற்சி செய்வர். சிலர் வெல்வர். சிலர் தொடர்வர். ஆனால் மனம் சார்ந்த கெட்ட பழக்கம் ஒருவருக்கு இருக்கிறது என்று யாரும் நம்பவோ ஒப்புக் கொள்ளவோ மாட்டார்கள். மற்றவர்கள் அதனை சுட்டிக்காட்டினாலும் பெரும்பாலும் அதனை தன்மான பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அதை மறுத்து விடுவர். இதனால் அந்த கெட்ட பழக்கங்களிலிருந்து கடைசி வரை அவர்கள் வெளிவர முடியாமலே போகவும் கூடும். உடல் சார்ந்த கெட்ட பழக்கங்கள் - தனிநபரை அதிகமாக பாதிக்கும் மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள் — அவர் உடன் வசிக்கும் குடும்பம், உற்ற

திருமண வாழ்க்கையில் இருபாலருக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் சலிப்புகள்

திருமண வாழ்க்கையில் இருவருக்கும் அவ்வப்போது ஏற்படும் சலிப்புகள்   (எல்லோருக்கு இல்லை பலருக்கு) ஆண்கள் பக்கம் என்ன சம்பாதித்து கொடுத்தலும் மரியாதை இல்லாத வாழ்க்கை உடன் பிறப்புகள் பெற்ற தாய் தந்தை அனைவரையும் மாற்றான் போல பார்க்கும் சூழ்நிலை உருவாதல் உண்மையில் கல்யாணம் என்பது நமக்கு பெரிய கால் கட்டுதான் என்ற எண்ணம் அவ்வப்போது தோன்றத்தான் செய்கிறது யாரோ என்னை வீடியோ கேமரா கொண்டு தொடர்ந்து படம் பிடித்துக் கொண்டே இருப்பது போன்ற உணர்வு 7 1/2 வருடந்தான் சனி பகவான் பிடிக்கும் காலம்……. என் மொத்த வாழ்நாள் வருமானமும் உன்னுடையதாகிறது. இதில் நான் கேட்ட 20 பவுண் மட்டும் வரதட்சணை என்று சொல்லப்படுகிறது. எங்கு போய் நியாயம் கேட்க………. தேவை என்ற போது தான் பூஜை விரதம் 3 நாள் என்கிறாள். இதில் பாதி நாள் கழித்து விடுகிறது……… மாதவிடாய் நிறுத்தம் அவளுக்கு அடங்கிவிட்டது. எனக்கு இல்லையே என்ன செய்வது……… அப்போது விரும்பியவள் இப்போது இந்த வயசுல அலையாதிங்க என்று சொல்வதை கேட்க வேண்டியிருக்கு…..… Etc பெண்கள் பக்கம் சமையலறை சுவர்கள் கூட சொல்லுது நீ நல்லா சமைக்கிறாய் என்று….. ஆனால் இந்த மனிஷன் பொன் வாயில் வரலையே….. திரிஷா

ஆண் பெண் ஈர்ப்பு இயற்கை

ஆண் பெண் ஈர்ப்பு இயற்கை   ஆண் பெண் இருவருக்கும் இயற்கையான ஈர்ப்பு உடல் சார்ந்த மற்றும் மனம் சார்ந்த ஈர்ப்புகள் இருப்பது இயற்கை. இயற்கையில் உயிரை உருவாக்குவது தான் ஈர்ப்பிற்கான காரணம். ஆண் பெண் இணையும் போது உயிர் உருவாகும். எனவே தான் ஈர்ப்பு என்பது இயற்கை. இது மனிதன் மட்டுமல்ல எல்லா உயிர்களுக்கும் பொருந்தும். இதில் மனம் சார்ந்த ஈர்ப்பாக காதல் மனித இனத்திற்கு உருவாக்கம் நிகழ்கிறது. ஆனால் மனித இனம் அறிவின் வளர்ச்சியால் பல சட்ட விதிகள் மற்றும் சமூக சூழ்நிலைகளை உருவாக்கி அதில் பொருந்தி வாழும் முறைக்கு வந்துவிட்டோம். எனவே உடல் ஈர்ப்பு தவறாக பார்க்கப்படுகிறது. எனவே ஈர்ப்பு இயற்கை என்று செயலில் இறங்கக் கூடாது. ஊருடன் ஒத்து வாழ் என்பது போல இன்று உள்ள சமூக சூழ்நிலைகள் சட்டம் விதிகளின் படி வாழ வேண்டும். இல்லை என்றால் பல சிக்களை உருவாக்கிவிடும். மேலும் மனம் தொடர்பான ஈர்ப்பு என்பது பல காலங்கள் கடந்தும் நினைவில் நிற்கும்.

உடல் சார்ந்த தலைப்புகள் (6)

உடல் சார்ந்த தலைப்புகள் 1 உடல் மொழிகள் 2) உடல் ஒழுக்கம், மன ஒழுக்கம், சிந்தனை ஒழுக்கம் 3) 4) 5)

பொதுவான தலைப்புகள் (5)

பொதுவான தலைப்புகள் 1) அன்பு, பாசம், காதல் வேறுபாடு 2) இந்த உலகில் வாழ்வதற்கான தகுதிகள் 3) குறைவாக பேச உத்திகள் 4) பக்குவமடைந்த மனிதனின் குணங்கள் 5) புத்தி மனம்   6) ஆண் பெண் ஈர்ப்பு இயற்கை   7) திருமண வாழ்க்கையில் இருபாலருக்கும் அவ்வப்போது ஏற்படும் சலிப்புகள்   8) மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள்   9) நல்ல பழக்கங்கள்   10) மனநிலை ( Mindset ) English version  11) திருமண வாழ்க்கையில் இருபாலருக்கும் இடையே அவ்வப்போது ஏற்படும் சலிப்புகள் 12) மன உளைச்சலை போக்கும் வழிமுறைகள்   ******************************************* மேலும் தெரிந்து கொள்ள தலைப்பு 1 மனம் சார்ந்த தலைப்புகள் (1) தலைப்பு 2 மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வும் உயர் இலக்குகளை அடையவும் உத்திகளுக்கான தலைப்புகள் (2) தலைப்பு 3 குடும்பம் சார்ந்த தலைப்புகள் (3) தலைப்பு 4 செல்வம் சார்ந்த தலைப்புகள்  (4 தலைப்பு 5 பொதுவான தலைப்புகள் ( 5)

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4) (Wealth) 1) ஈர்ப்பு விதியை பயன்படுத்தி செல்வத்தை பெருக்கலாம் 2) எதிர் கால திட்டமிடல்( Planning ) 3)அறிவு மனம் 4)கனவு காணுங்கள் ( Visualisation ) 5) மகிழ்ச்சியான உணர்வு செல்வந்தர் ஆக்கும்   ********************************************** மேலும் தெரிந்து கொள்ள தலைப்பு 1 மனம் சார்ந்த தலைப்புகள் (1) தலைப்பு 2 மகிழ்ச்சியாகவும் நிம்மதியாகவும் வாழ்வும் உயர் இலக்குகளை அடையவும் உத்திகளுக்கான தலைப்புகள் (2) தலைப்பு 3 குடும்பம் சார்ந்த தலைப்புகள் (3) தலைப்பு 4 செல்வம் சார்ந்த தலைப்புகள்  (4 தலைப்பு 5 பொதுவான தலைப்புகள் ( 5) தலைப்பு 6 சக மனிதர்களுடன் சுமூக உறவு     (People Skill)

காதல் உணர்வு

காதல் உணர்வு காதல் என்பது ஒரு வகை உணர்வு ஆகும். ஆண் பெண் இருபாலருக்கும் இடையே உள்ளம் ( மனம்) சார்ந்த ஈர்ப்பு காதல் உணர்வு  காதல்  ஏற்பட்டால் எப்படி இருக்கும்   1) காதல் ஏற்பட்டவர்களுடனேயே இருக்க விரும்பும். 2) பார்வையில் காதல் உணர்வு பரிமாற்றம் செய்யப்படும் 3) எப்போதும் அவர்கள் நினைவில் இருக்க வைக்கும் 4) உணவு தூக்கம் மறக்கும் 5) சூழ்நிலைகள் மறக்கும் 6) காதல் மட்டுமே சரி எனத் தோன்றும் 7) தாய் தந்தை சொல் மண்டையில் ஏறாது  8) உடல் சார்ந்த தொடுதல்களை விரும்பும். உணர்வு உணர்ச்சிகளாக மாறத் துடிக்கும் 9) என்னுடையது என‌ உடைமையாக கருதத் தோன்றும் 10) சின்ன சின்ன சண்டைகள் சகஜம். மன்னிக்க தோன்றும்  11) பரிசுகள் மழையாகும் 12) காதலில் தோற்றாலும் ஜெயித்தாலும் உயிர் உள்ளவரை நினைவில் நிற்கும்  12) அவர்களின் நினைவாக வரும் கனவுகளில் மூழ்கத் தோன்றும் 

பக்குவம் அடைந்த மனிதனின் குணங்கள்

பக்குவமடைந்த மனிதனின் குணங்கள்   1) எதையும் புன்னகையுடன் கடந்த செல்வார்கள் 2) நமது பேச்சு எடுபடாது என்ற போது அமைதியாக இருப்பார்கள் 3)தன்னை எல்லோரும் புகழவேண்டும்,, பாராட்ட வேண்டும், விரும்ப வேண்டும், என்று எதிர்பார்க்க மாட்டார்கள்  4) எதர்க்கும் பெரியதாக அலட்டிக் கொள்ளா மாட்டார்கள் 5) மற்றவர்களுக்கு மதிப்பு கொடுப்பார்கள்,  அனைவரிடமும் அன்பு செலுத்துவார்கள். 6) எனக்கு எல்லாம் தெரியும் என்று நினைக்க மாட்டார்கள்.  நிறைய கற்றுக் கொண்டே இருப்பீர்கள். 7) சமூகத்தை திட்டுவதை விட்டுவிட்டு சூழ்நிலைக்கு ஏற்ப வாழ பழகி இருப்பார்கள். 8) நேர்மறை சிந்தனைகளுடன் பயணிப்போர் 9) பிரயோஜனம் இருக்காது என்ற விஷயத்தை பேசி நேரத்தை வீணடிக்க மாட்டார்கள் 10) விதி தலையெழுத்து என்று குறை கூறிக் கொண்டு இருக்க மாட்டார்கள்.