Posts

Showing posts from September, 2024

பெண் ஏன் அடிமையானாள் - தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும் - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 2 - வள்ளுவரும் கற்பும்  ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்)  புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம்  2) வள்ளுவரும் கற்பும்   தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்  பெய்யெனப் பெய்யும் மழை. " தெய்வத்தை தொழாமல் தன் தலைவனை தொழுகின்றவள், மழையை பெய்யன்றால் பெய்யும்" வள்ளுவர் ஒரு பெண்ணாக இருந்திருந்தால் கற்புக்கு இம்மாதிரியான கருத்துக்களை கூறியிருக்க மாட்டார். எந்த பெண்ணரசியாகிலும் தன்னை ஆண் பிறவிக்கு அடிமை என்றாவது, தாம் அப்பிறப்பிக்குக் கீழ்பட்டவர்கள் என்றாவது, ஆண் தன்மையை விட பெண் தன்மை ஒரு கடுகளவாவது தாழ்ந்தது என்றாவது எண்ணிக் கொண்டிருப்பார்களானால் அவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் பெண்ணரசி என்று சொல்ல நாம் ஒருகாலும் ஒப்போம். அவ்வையாரின்   "தையல் சொற்கேளேல்" ( பெண்கள் சொல்லை கேட்கக் கூடாது) "பேதமை என்பது மாதர்க்கு அணிகலன்"( அறியாமை பெண்களின் ஆபரணம்)   வள்ளுவரின்   "பெண்வழிச் சேரல்" ( பெண்கள் இஷ்டப்படி நடக்கக் கூடாது) பெண்களும் பகுத்தறிவுள்ள, சிந்தனா சக்தி உள்ள மனித ஜீ

பெண் ஏன் அடிமையானாள் - தலைப்பு 1 -கற்பு - பெரியார்

பெண் ஏன் அடிமையானாள் ( புத்தக கருத்துக்கள்) தலைப்பு 1 - கற்பு  ( இப்புத்தகம் பெரியார் எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு ஆகும்)  புத்தகத்தில் உள்ள கருத்துகள் சுருக்கமாக காணலாம்  1) கற்பு கற்பு என்பது சொல் தவறாமை அதாவது நாணயம் சத்தியம் ஒப்பந்தத்திற்கு விரோத மில்லாமல்......... ஆங்கிலத்தில் Virginity என்றால் பரிசுத்தம் ........ ஆரிய பாஷையில் கற்பு என்றால் அடிமை ....... திருக்குறளில் தன் தலைவனை தொழுகின்றவள் மழையைப் பெய்யென்றால் பெய்யும்....... திருவள்ளுவர் ஒரு ஆணாயில்லாமல் பெண்ணாயிருந்து இக்குறள் எழுதியிருப்பாரானால் இம்மாதிரி கருத்துக்களை எழுதி இருப்பாரா!!!!!!...... என்பதை கவனிக்கும்படி வேண்டுகிறேன் என்கிறார் பெரியார். ஆண்கள் கற்புடையவர்கள் என்று குறிக்க நமது பாஷைகளில் தனி வார்த்தைகளே காணாமல் மறைக்கப்பட்டுக் கிடைப்பதற்கான காரணம் ஆண்களின் ஆதிக்கமே........ உண்மையில் பெண்கள் விடுதலை வேண்டுமென்றால், ஒரு பிறப்புக்கொரு நீதி வழங்கும் நிர்ப்பந்தக் கற்பு முறை ஒழிந்து , இரு பிறப்பிற்கும் சமமான சுயேட்சைக் கற்பு முறை ஏற்பட வேண்டும்.   கற்புக்காகப் பிரியமற்ற இடத்தைக் கட்டி அழுது கொண்டிருக்கச் செய்யும் படியா

சக மனிதர்களுடன் சுமூக உறவு ( People skill)) - 6

சக மனிதர்களுடன் சுமூக உறவு     (People Skill) நமக்கு சக மனிதர்களுடன் நல்ல நட்போ அல்லது உறவோ ஏற்பட வேண்டும் என்றால் கீழே உள்ள உத்திகளை சரியாக கையாள வேண்டும். அன்பு இருந்தால் கோபம் வராது. அனைவரின் மீதும் அன்பு செலுத்த பழக வேண்டும். தவறுகள் நிகழும் போது எதிரே இருப்பவரை குறை கூறுவதை தவிர்த்து அதில் உள்ள நோக்கத்தினை (Intention) பார்க்கவும்  1 ) உடன் இருப்பவர்களை அவர்களின் நல்ல  செயல்களுக்கு பாராட்டுதல் (Appreciation) 2) எதற்கும் குறை கூறாமல் இருத்தல் (Complaning)   3) நன்றி கூறுதல் ( Gratitude) 4) மற்றவர்களின் தனிப்பட்ட விஷயங்களை தவறாக விமர்சனம் செய்யாதிருத்தல் (Wrong Reviews) 5) தண்டனைகளும் கண்டிப்புகளும் சண்டைகளும் சுமூக உறவை கெடுக்கும்  6) அவர்களின் வரம்பிற்குள் நுழையாமல் இருத்தல்  7) தேவையற்ற அறிவுரை மற்றும் ஆளோசனை வழங்காமல் இருத்தல் ( No Advices) 8) தவறுகளை குத்திக் காட்டாமல் இருத்தல்  9) மற்றவர்கள் மீது எதிர்மறைப் பேச்சு பேசாமல் இருத்தல்  10) முடிந்த உதவிகளை எதிர்பார்பின்றி செய்தல்.  11) மற்றவர் பேசுவதை காது கொடுத்து கேட்க வேண்டும்.( Art of listening) 12) தேவை இல்லாமல் அறிவுரை வழங்கு

குழந்தை வளர்ப்பு

குழந்தை வளர்ப்பு  1) சுய மதிப்பு உருவாக்குதல்  2) சுய விழிப்புணர்வு கொள்ளச் செய்தல் 3) நேர்மறை சிந்தனை, எண்ணங்கள் வளர்த்தல்  4) சுய பேச்சு ( Self talk) 5) சகமனித நேயம்  6) மன்னித்தல் குணம்   7) தனித் தன்மை ( Individualty) 8) முடிவெடுக்கும் திறன் ( Decision making) 9) நல்லவலனோடு சேர்த்த வல்லவன் 10) குறிக்கோளில் தெளிவு 11)  நேர்மை நீதி நியாயம் தர்மம்  12) சொல்வளம்  13) மனப் பக்குவம் ( maturity) 14)  சுறுசுறுப்பு  15) உதவும் மனப்பான்மை  16) வளர்ந்த குழந்தைகள் மீது அளவான மேலாண்மை  

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள்.

குழந்தை வளர்ப்பில் பெற்றோர்கள் செய்யும் தவறுகள். 1) ஒப்பிடுதல் 2) இரண்டாவது குழந்தை பிறந்ததும் முதல் குழந்தையை கவனிப்பு குறைதல்  3) பதின்பருவ தவறுதளை வெட்ட வெளிச்சமாக்கிவிடுதல் 4) நுண் மேலாண்மை (Miro management)  5) மதிப்பெண் வைத்து மதிப்பிடுதல் 6) உணர்வுகளுக்கு மதிப்பளிக்காமை 7) முடிவெடுக்க விடாமல் செய்தல்  8) தனித் தன்மைக்கு முக்கியத்துவம் அளிக்காமை 9) மோசமான எதிர்மறை வார்த்தைகள் பிரயோகம்  10) குழந்தைகளின் விருப்பங்கள் கனவுகள் ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளிக்காமை