திருமாலின் தசாவதாரம் (6)- பரசுராமர் அவதாரம்

திருமாலின் தசாவதாரம்

திருமால்   காக்கும் கடவுள் ஆவார். இவர்  உலக உயிர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழச்செய்ய பத்து அவதாரங்களை இந்த பூமியில் எடுக்கின்றார். 
தீமைகளை நீக்கி உலக உயிர்களின் நன்மைக்காகவும் நல்வாழ்விற்காகவும் விஷ்ணு வின்  அவதாரங்களே திருமாலின் பத்து அவதாரங்கள் (தசாவதாரம்) என்று அழைக்கப்படுகிறது 

6)பரசுராமர் அவதாரம்
திருமாலின் 6வது அவதாரம்

ஜமத்கினி முனிவருக்கும், ரேணுகாவுக்கும் மகனாகப் பிறந்து, பிராமணர்களைக் காக்க மறுத்த க்ஷத்திரிய குலத்தைக்  அழிக்க, சபதமேற்ற பரசுராம அவதாரம்.

ஜமதக்கினி - ரெணுகா தம்பதிகளின் ஐந்து மகன்கள் வசு, 
விஸ்வா வசு, 
பிருகத்யானு, 
பிருத்வான்கண்வர் இராமபத்திரன் ( பரசுராமர்).

மகிஷ்மதி நகர மன்னன்
கிருதவீரியன் பத்மினி தம்பதிகளின் மகனான கார்த்தவீர்ய அர்ஜுனன் ஆயிரம் கைகள் கொண்டவன்.

அனைத்து உலகையும் ஆள விரும்பிய கார்த்தவீரிய அர்ஜுனன்-
பிரம்மா, விஷ்ணு, சிவன் ஆகிய மும்மூர்த்திகளின் அம்சமான தத்தாத்ரேயருக்கு ஆயிரம் ஆண்டுகள் பணிவிடைகள் செய்து அனைத்துலகையும் ஆளும் வரமும்
 விஷ்ணு தவிர வேறு எவராலும் மரணம் இல்லை என்ற வரமும

விண்ணுலகம் மண்ணுலகையும் சென்று வர
4000 கெஜம்(12000 அடி) உள்ள தெய்வீக தங்கத்தேரையும்  வரமாக பெற்றாள்.

வரங்களை
 அறநெறிப்படி பயன்படுத்த வேண்டும் என்று தத்தாத்ரேயர் அறிவுறுத்தினார்.  இதன்படி அவன் ஹைஹேயப் பேரரசின் சக்கரவர்த்தியாக பூவுலகை ஆட்சி செய்தான்.

பிறகு
பல மன்னர்களை துன்புறுத்திய கார்த்தவீர்யார்ஜுனன் ஒருமுறை இந்திரனை அவரின் மனைவியான சசியின் முன்னிலையில் அவமானப்படுத்தினான்.

 கார்த்தவீர்யார்ஜுனன் வர்ணனிடம் தனக்கு நிகரான வலிமை கொண்டவன் இப்போது உலகில் யாரும் இருக்கின்றானா?என்று கேட்டபொழுது முனிவர் ஜமதக்கினியின் மகன் பரசுராமனை கை காட்டினார்.

அதனால் காத்தவீரிய அர்ஜுனன் ஜமதக்கினி முனிவரின் ஆசிரமத்திற்கு வந்தான். அங்கு பரசுராமர் இல்லை.
ஜமதக்கினி வளர்த்துக் கொண்டிருந்த காமதேனுவின் மகளான சபலை எனும் தெய்வீக பசுவை கார்த்தவீரிய அர்ச்சுனன் தன்னிடம் வழங்கும்படி கேட்டான். ஜமதக்கினி முனிவர் மறுக்கவே பசுவை கவர்ந்து சென்றான். 
இச்செய்தியை ஜமதக்கினி முனிவர் பரசுராமரிடம் தெரிவித்தார். கோபமுற்ற பரசுராமன் கார்த்தவீர்ய அர்ஜுனன் தலையை தன் கோடாரியால் வெட்டினார்.

அதற்கு பழிக்குபழியாக 
கார்த்தவீர்ய அர்ஜுனனின்
மூன்று மகன்கள் பரசுராமர் ஆசிரமத்தில் இல்லாத நேரத்தில் ஜமதக்கினி முனிவரை கொன்றனர் .
இதனால் கோபமுற்ற பரசுராமர் ‌ பல க்ஷத்திரிய தலைமுறையினரை கொள்வேன் என்றும்   சத்திரியர்களுக்கு  குருவாக  இருந்து கலைகளை சொல்வித்தர மாட்டேன் என்றும் சபதம் எடுத்தார்..

இவரின் சீடர்கள்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி