மகாபாரத கதாபாத்திரங்கள் (31) - கர்ணன்

கர்ணன்

1) தந்தை- தாய்

குந்திக்கு துர்வாசர் முனிவர் அளித்த வரத்தினால் திருமணத்திற்கு முன்
சூரிய தேவனின்  அருளால் கர்ணன் பிறந்தார்

2) சகோதரர்கள்


3) வளர்ப்புப் பெற்றோர்

அதிரதன் - ராதை

(பிதாமகர் பீஷ்மர் தேரோட்டி)

4) மனைவிகள்

விருஷாலி ( துரியோதனன் தேரோட்டியான சத்தியசேனனின் சகோதரி)
பொன்னுருவி
சுப்ரியா (துரியோதனன் மனைவியான பானுமதியின் தோழி)

5) மகன்கள்

விருசசேனன்
விருஷகேது
சுதமா
ஷத்ருஞ்ஜயா 
திவிபடா
சுஷேனா 
சத்தியசேனா 
சித்ரசேனா
சுஷர்மா 


(திரௌபதியின் சுயம்வரத்தைத் தொடர்ந்த கைகலப்பில் சுதமா இறந்தான்.

 ஷத்ருஞ்ஜயா மற்றும் த்விபடா ஆகியோர் குருக்ஷேத்ரா போரில் துரோணர் கௌரவர்களின் படைக்கு தலைமை தாங்கியபோது அர்ஜூனன் கைகளில் மடிந்தனர்.

 சுஷேனா போரில் பீமனால் கொல்லப்பட்டார்.

 சத்யசேனா, சித்ரசேனா மற்றும் சுஷர்மா நகுலனின்கைகளால் இறந்தனர்.

 கர்ணனின் மூத்த 
மகன் விருசசேனன் போரின் 17வது நாள் போரில், கர்ணன் போர்படைகளுக்கு தலைமை ஏற்றிருந்தபோது அருச்சுனனிடம் போரிட்டு இறந்தான்

6) குருஷேத்திரப் போருக்குப் பின் உயிருடன் இருந்த கர்ணனின் மகன் யார்

விருச்சகேது

(விருச்சகேது மட்டுமே  குருக்ஷேத்திர போரில் பிழைத்த கர்ணனின் மகன்களில் ஒருவன். போருக்குப் பின்னர் அவன் பாண்டவர்களின் அரவனைப்பில் இருந்தான். அங்க தேசத்து அரசனாகவும் இருந்தான்)

7) இவரிடம் கவச குண்டலத்தை தானமாக பெற்றவர் யார் 

இந்திரன்

8) குந்திக்கு கர்ணன் அளித்த வரங்கள் (குந்தி இவரிடன் பெற்ற  வரங்கள் )

அர்ஜுனன் தவிர மற்ற பாண்டவர்கள் மீது அம்பை எய்த மாட்டேன்

அர்ஜுனன் மீது நாகாஸ்திரத்தை ஒரு முறை மட்டுமே பிரயோகிப்பேன்

9) குந்தியிடம் இவர் கேட்ட வரம் என்ன

நான் இறக்கும் தருவாயில் மட்டுமே நான் உனது   மகன்  இவ்வுலகிற்கு சொல்ல வேண்டும்

10) இவரின் குரு


11)) இறப்பு

குருசேத்திரப் போரில் 17ம் நாள் அர்ஜுனனால் அஞ்சலிகம் வில்லினால் கொல்லப்பட்டார்

12) இந்திரன் வழங்கிய சக்தி ஆயுதத்தால் இவர் யாரை கொன்றார்


13)) குந்தி இவரை எந்த ஆற்றில் கூடையில் வைத்து விட்டார்

கங்கை ஆற்றில்

14) பிறக்கும்போதே இவருடன் இருந்தது

 கவசம் குண்டலம்

15) உயிரைக் கொடுக்கும் அளவிற்கு நேசித்த நண்பன்


16) வேறு பெயர்கள் 

வாசுசேனா 
ராதேயன்


17) கர்ணனின் குணம்

மாபெரும் கொடை வள்ளல்

18) கர்ணனின் சாபங்கள்

அ)பரசுராமர் சாபம் ஆ)பிராமணரின் சாபம் இ)பூமாதேவியின் சாபம்

19) இவர் ஆண்ட இடத்தின் பெயர்

 அங்க தேசம்

20) குருசேத்திரப் போரில் போர் படை தளபதியாக பங்கேற்பு

16 மற்றும் 17 ஆம் நாளில் குருஷேத்திரப் போரில் படைகளின் தளபதியாக இருந்தார்

31) கர்ணனின் இறப்புக்கு காரணங்கள்

ஆ) ஒரு பிராமணரின் சாபம்
இ) பூமாதேவியின் சாபம்
ஈ) குந்தி பெற்ற இரண்டு வரங்கள்
உ) இந்திரன் கர்ணனிடம் இருந்து பெற்ள தானம் ( கவசம் குண்டலங்கள்)
ஊ) இந்திரன் ராட்சச தேனியாக மாறி கர்ணனின் தொடையை துளைத்தல்
எ) குருசேத்திரப் போரில் இவரின் தேரோட்டியான சல்லியன் பாதியில் தேரை விட்டு செல்லல்
ஏ) கர்ணனின் நாகாஸ்திரத்திலிருந்து அர்ஜுனனை காக்க கிருஷ்ணன் தேரை பூமியில் அழுத்துதல்
ஐ) கர்ணனின் தெய்வீகமான விஜயா அம்பினை பயன்படுத்தவில்லை (இந்திரன் தனது விஜயா என்ற சக்திவாய்ந்த வில்லை பரசுராமருக்கு அளித்தார்.
பரசுராமர் தனது சீடன் கர்ணனுக்கு அளித்தார்)
ஒ) பாண்டவர்களின் தாயான குந்தி கர்ணன் தனது மூத்த மகன் என்று தன் மகன்களிடம் சொல்லாமல் இருந்தது

            **********************


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி