நாரதர்(பிரஜாபதி)
நாரதர் (பிரஜாபதி) பிரம்மாவின் மனதிலிருந்து தோன்றியவர்கள் சனகாதி முனிவர்கள் ஆவர் சனகர், சனந்தனர், சனாதனர், சனத்குமாரர் என்று நால்வர் பிறந்தனர். இவர்களை ஆயிரங்கோடி மக்களைப் பெற்று பிரபஞ்சத்தை விரிவுபடுத்துங்கள் என்று உத்தரவிட்டார். ஆனால், அவர்களுக்கு அதில் சம்மதமில்லை. பரம்பொருளான நாராயணனை அடைவதே அவர்களின் குறிக்கோள் என்ற கூரி இல்லறத்தில் ஈடுபட மறுத்துவிட்டார்கள். பிறகு பிரம்மா தனது உடலின் பாகங்களில் இருந்து 10 பிரஜாபதிகளை படைத்தார். வசிட்டர் மரீசி அத்திரி ஆங்கிரசர் புலஸ்தியர் புலகர் கிரது நாரதர் தட்சன் பிருகு (பிரம்மாவின் புத்திரர்களாகவும் கருதப்படுகின்றனர்) அவர்களில் ஒருவரான நாரதர் மட்டும் இல்லற வாழ்வில் ஈடுபட மறுத்துவிட்டார். அதனால் பிரம்மா கோபம் கொண்டு நாரதரை மனிதப்பிறவி எடுத்து 50 பெண்களை திருமணம் செய்து கொண்டு சிற்றின்ப வாழ்வில் வாழ்வாய் என்றும் அதற்கு அடுத்த பிறவியில் எச்சில் உணவை உண்டாய் என்றும் சபித்தார். அதற்கு நாரத முனிவர் எப்பிறவி எடுத்தாலும் நான் நாராயணனின் பக்தனாக இருந்து நாராயணன் புகழ் பாடிக் கொண்டே இருக்க வேண்டும் ...