Posts

Showing posts with the label சுயமதிப்பு

சுயமதிப்பு ( Self Esteem)

சுயமதிப்பு ( SELF ESTEEM ) சுயமதிப்பு என்பது நாம் நம்மைப் பற்றி நம் மீது வைக்கும் மதிப்பீடாகும். நம் மீது நாம் நல்ல மதிப்பை வைத்திருந்தால், நாம் நம்மை நேசித்தால் நம் இலக்கை அடைவதற்கான பாதை நமக்கு புலப்படும். அதனால் சுயமதிப்பை நன்கு வளர்த்து வைத்துக் கொள்ள வேண்டும் சுயமதிப்பை வளர்த்தல்   என்னால் முடியும் நான் அதிஷ்ட சாலி நான் சாதிக்க பிறந்தவன் நான் திறமைசாலி நான் மகிழ்ச்சிமாஇக இருக்கிறேன் என்னை எல்லோரும் மதிக்கிளார்கள் நான் பலருக்கு உதவும் நிலையில்  இருக்கின்றேன்  நான் என்னை நேசிக்கிறேன். சுயமதிப்பை அழித்தல்   என்னால் முடிமாது நான் அதிஷ்டம் இல்லாதவன் எனக்கு எல்லாமே கெட்டதுதான் நடக்கும் நான் ஏழ்மையில் இருக்கிறேன்  என் குடும்ப சூழ்நிலை சரியில்லை  முன்னேற என் படிப்பு போதாது நான் பார்க்க அழகாக இல்லை எனக்கு நேரம் சரியில்லை. நாம் நம் சுயமதிப்பை உயர்வாக வைக்க வேண்டும். சுயமதிப்பை வளர்ப்பதற்கு தேவையான யுக்திகளை கற்றுக் கொள்ள வேண்டும். நாமே நம்மை விரும்பவில்லை என்றால் நம்மை யார் விரும்புவார்கள் என்பதில் தெளிவு வேண்டும். சுய மதிப்பை வளர்த்து வாழ்வில் இலக்கை அடைவோம்

வாழ்வியல் கலை- சுயமதிப்பை வளர்த்தல்

சுயமதிப்பை வளர்த்தல் சுயமதிப்பு என்பது அவரவர் அவரரை விரும்புதல், ஏற்றுக்கொள்ளுதல், அங்கீகரித்தல், மதித்தல் மாற்றத்தை ஏற்றல் போன்றவற்றுடன் தொடர்புடையது. நாம் முதலில் நம்மை விரும்ப வேண்டும். இது மனம் சார்ந்த ஒன்றாகும். நமக்கான புறசூழல்களை அங்கீீகரித்து முன்னேற்றத்திற்கான வழிகளை தேடுதல் சுயமதிப்பை கூட்டும்.  சுயத்தை வெறுப்பதையும் சுயத்தை கேலிப்பொருளாக மற்றவர்கள் முன் சித்தரிப்பதும் சுயமதிப்பை வேரருக்கும்.  சுயமதிப்பை வளர்த்தலின் அவசியம் யாதெனில் நாம் நம்வாழ்வில் நம்மையும் மதித்து சக மனிதர்களையும் மதித்து நமது வாழ்வை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கான வழிதேடுதல் அவசியம். விதியை தொடர்ந்து நொந்து சொல்வதை விடுத்து, நாமே நம்மை விரும்பி, நம்மிடம் உள்ள திறமையை தேடி எடுத்தலும் உயர் லட்சியங்களை பொருத்தி அதனை அடைதலுக்கான மார்க்கங்களை காணுதலும் வாழ்வில் நிச்சயம் வெற்றி தரும். நாம் நம் மீது வைத்திக்கொள்ளும் கணிப்பே சுயமதிப்பு  ஆகும். அதாவது நம்மைப்பற்றி நாம் என்ன உணர்கிறோம் என்பது சுயமதிப்பு ஆகும். உயர் சுயமதிப்பு கொண்டவர்கள் எப்போது மிக்க தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் தன்னைத்தானே விரும்பு...