புத்தி, மனம்
புத்தி , மனம் புத்தி சார்ந்த முடிவுகள் என்பது நல்லது கெட்டது பற்றி யோசித்து முடிவெடுக்கக்கூடியது மனம் சார்ந்த முடிவுகள் என்பது பிடித்தது பிடிக்காதது என்பது குறித்து முடிவெடுக்கக்கூடியது உதாரணம் 1 அதி காலையில் எழுவது நல்லது என்று புத்தி சொல்லும். அதி காலை தூக்கம் என்பது மனதிற்கு பிடித்து எழ விடாது. உதாரணம் 2 நல்லது கெட்டது யோசிப்பதே புத்தியின் வேலை. அத்தனைக்கும் ஆசைப்படுவதே மனதின் வேலை உதாரணம் 3 வீட்டு சாப்பாடு நல்லது என்று புத்தி சொல்லும் ஹோட்டல் சாப்பாடு order பண்ண மனம் ஆசைப்படும் உதாரணம் 4 இந்த காதல் சரிவராது என புத்தி சொல்லும் எது வந்தாலும் பார்த்துக்கலாம் என்று மனம் காதலில் இறங்கும் இது போன்று தான் நாம் எது சார்ந்து முடிவெடுக்க வேண்டும் என்ற மன உறுதி வேண்டும். ஜெயிப்பது ஆசையா! மன உறுதியா! என்பதில் தான் நம் எதிர்கால பயணம் தீர்மானமாகும். சில நேரங்களில் புத்தி சொல்வதையும் சில நேரங்களில் மனம் சொல்வதையும் கேட்கலாம் சூழ்நிலையை பொருத்தது. புத்தியும் மனமும் இணைந்து ஒரு விஷயத்தை ஒப்புக்கொண்டால் அதுவே சிறந்த முடிவாக அமையும்.