மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள்
மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள் ஒரு மனிதன் உடல் சார்ந்த கெட்ட பழக்கங்களோ அல்லது மனம் சார்ந்த கெட்டப்பழக்கங்களோ ஏதேனும் ஒன்றில் இருப்பான் அல்லது அவற்றில் இருந்து தெளிந்து வெளியே வந்திருப்பான். உடல் சார்ந்த கெட்ட பழக்கங்களை பற்றியே அனைவரும் கவலைப்படுகிறார். தவறு என்று பேசுகிறோம். மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள் தான் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கெட்ட பழக்கங்கள். உடல் சார்ந்த கெட்ட பழக்கங்கள் நமக்கு எப்போது கெட்ட பழக்கம் என்று தெரிகி. றதோ அப்போது அதனை விடுவதற்கான முயற்சியை பெரும்பாலுனோர் மேற்கண்டு அதிலிருந்து வெளி வர முயற்சி செய்வர். சிலர் வெல்வர். சிலர் தொடர்வர். ஆனால் மனம் சார்ந்த கெட்ட பழக்கம் ஒருவருக்கு இருக்கிறது என்று யாரும் நம்பவோ ஒப்புக் கொள்ளவோ மாட்டார்கள். மற்றவர்கள் அதனை சுட்டிக்காட்டினாலும் பெரும்பாலும் அதனை தன்மான பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அதை மறுத்து விடுவர். இதனால் அந்த கெட்ட பழக்கங்களிலிருந்து கடைசி வரை அவர்கள் வெளிவர முடியாமலே போகவும் கூடும். உடல் சார்ந்த கெட்ட பழக்கங்கள் - தனிநபரை அதிகமாக பாதிக்கும் மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள் — அவர் உடன் வசிக்கும் குடும்பம், உற்ற...