மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள்

மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள்

ஒரு மனிதன் உடல் சார்ந்த கெட்ட பழக்கங்களோ அல்லது மனம் சார்ந்த கெட்டப்பழக்கங்களோ ஏதேனும் ஒன்றில் இருப்பான் அல்லது அவற்றில் இருந்து தெளிந்து வெளியே வந்திருப்பான்.

உடல் சார்ந்த கெட்ட பழக்கங்களை பற்றியே அனைவரும் கவலைப்படுகிறார். தவறு என்று பேசுகிறோம். மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள் தான் மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்தும் கெட்ட பழக்கங்கள்.

உடல் சார்ந்த கெட்ட பழக்கங்கள் நமக்கு எப்போது கெட்ட பழக்கம் என்று தெரிகி. றதோ அப்போது அதனை விடுவதற்கான முயற்சியை பெரும்பாலுனோர் மேற்கண்டு அதிலிருந்து வெளி வர முயற்சி செய்வர். சிலர் வெல்வர். சிலர் தொடர்வர்.

ஆனால் மனம் சார்ந்த கெட்ட பழக்கம் ஒருவருக்கு இருக்கிறது என்று யாரும் நம்பவோ ஒப்புக் கொள்ளவோ மாட்டார்கள். மற்றவர்கள் அதனை சுட்டிக்காட்டினாலும் பெரும்பாலும் அதனை தன்மான பிரச்சினையாக எடுத்துக் கொண்டு அதை மறுத்து விடுவர். இதனால் அந்த கெட்ட பழக்கங்களிலிருந்து கடைசி வரை அவர்கள் வெளிவர முடியாமலே போகவும் கூடும்.

உடல் சார்ந்த கெட்ட பழக்கங்கள் - தனிநபரை அதிகமாக பாதிக்கும்

மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள் — அவர் உடன் வசிக்கும் குடும்பம், உற்றார் உறவினர், நண்பர்கள், அலுவலக நண்பர்கள் அனைவரையும் பாதிக்கும்.

மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள்

  1. எப்போதும் புலம்பல் குணம்.
  2. எப்போதோ நடந்த விரும்பாதவற்றை மாடு அசைபோடுவது போல போட்டுக்கொண்டே நினைவூட்டி நினைவூட்டி வருத்தம் சூழ்நிலையில் இருத்தல்
  3. எல்லாவற்றையும் Serious ஆக எடுத்துக் கொள்ளுதல்
  4. மற்றவர்களை தேவையில்லாமல் மதிப்பீடு செய்து கொண்டே இருப்பது
  5. எப்போதும் புரம் பேசுவதை பிரதான பணியாக வைத்திருப்பது
  6. எப்போதும் கெட்டதை ஈர்க்கும் உணர்ச்சிகளில் இருப்பது.
  7. எப்போதும் மற்றவர்களின் வாழ்க்கையை கண்காணிப்பது, சீரழிக்க நினைப்பது
  8. மகிழ்ச்சியான மனநிலை இல்லாதது.
  9. ஏற்படும் எல்லா உணர்வுகளும் தோன்றி மறையும் தன்மை கொண்டது என்பதை உணராமல் ஏற்படும் எல்லா உணர்வுகளுக்கும் முக்கியத்துவம் அளித்து அதை உணர்ச்சிகளாக மாற்றி கோபம் ,சண்டை, இயலாமை, அவமானம் போன்றவற்றை உருவாக்கிக் கொண்டே இருத்தல்.

உடல் சார்ந்த கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களோடு Adjust செய்து வாழ்ந்து விடலாம்

ஆனால் மனம் சார்ந்த கெட்ட பழக்கங்கள் உள்ளவர்களோடு வாழ்பவர்களின் நிலை மிகவும் கடினம்

Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி