Posts

Showing posts with the label நேர்மறை சிந்தனை

சிந்தனை ஒழுக்கம்

சிந்தனை ஒழுக்கம். எண்ணங்களின் கோர்வையே சிந்தனையாகும்.   நல்ல எண்ணங்களின் கோர்வை நேர்மறை சிந்தனை .  கெட்ட எண்ணங்களின் கோர்வை எதிர்மறை சிந்தனை ஆகும். எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் சிந்தனையில் ஒழுக்கம் இல்லை என்றால் அவர்களின் எதிர்மறை சிந்தனை கெட்டவற்றை மட்டுமே அவர்களிடம் கொண்டு சேர்க்கும். எது நல்லது எது கெட்டது என்பதும் சரி தவறு என்பதும் பிரபஞ்ச ஈர்ப்பு விதிக்கு தெரியாது. " நாம் எந்த உணர்ச்சியால் தொடர்ந்து சூழப்பட்டு இருக்கிறோமோ   அந்த உணர்ச்சியை அதிகரிக்கச் செய்வதே பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி தத்துவமாகும்" எனவே சிந்தனையில் ஒழுக்கம் கண்டிப்பாக தேவை .   நேர்மறை சிந்தனையின் விளைவுகள்  1)ஆரோக்கியம், மகிழ்ச்சி, செல்வம், நல்ல மனிதர்கள், நல்ல உறவுகள் உடன் இருப்பர் 2) சிக்கலை தீர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள். பிரச்சினைகளை சவால்களாக கருதுவர்  3)மோசமான மனிதர்களுடன் கூட சிறந்த உறவை பராமரிப்பர் . 4)தன் திறமைகளின் மீது நம்பிக்கை கொண்டிருப்பர். 5) மன அழுத்தம் ஏற்படும் போது அதிலிருந்து விரைவில் தன்னை விடுவித்துக் கொள்வர் 6) நல்ல உறக்கம் கொள்வர் . 7) இவர்களுக்...