திருமாலின் தசாவதாரம் (2)- கூர்ம அவதாரம்
திருமாலின் அவதாரங்கள் திருமால் காக்கும் கடவுள் ஆவார்.இவர் உலக உயிர்களை துன்பங்களில் இருந்து காப்பாற்றி நல்வாழ்வு வாழச்செய்ய பத்து அவதாரங்களை இந்த பூமியில் எடுக்கின்றார். தீமைகளை நீக்கி உலக உயிர்களின் நன்மைக்காகவும் நல்வாழ்விற்காகவும் விஷ்ணு வின் அவதாரங்களே திருமாலின் பத்து அவதாரங்கள் ( தசாவதாரம் ) என்று அழைக்கப்படுகிறது இரண்டாம் அவதாரம் 2)கூர்ம அவதாரம் கூர்மம் என்பது ஆமை என்று பொருள். கிருதயுகத்தில் நடைபெற்றது சிரஞ்சீவியாக வாழ வழிசெய்யும் அமிர்தம் கிடைப்பதற்காக தேவர்களும் அசுரர்களும் பாற்கடலை இறைவனின் கட்டளைப்படி கடைய தொடங்கினர் அப்போது மந்திர மலையை மத்தாகவும் சிவனின் கழுத்தில் நாகபரணாக இருக்கும் காசிபர் - கத்ரு மகளான வாசுகிப் பாம்பை கயிறாகவும் கொண்டு பாற்கடலைக் கடைந்தனர் .அப்போது அதன் பாரம் தாங்காது மலை கடலில் சாய்ந்தது . திருமால் ஆமையாக கூர்மாவதாரம் எடுத்து மலையை தாங்கி கடலை கடைய துணை புரிந்ததோடு கூர்ம அவதார தொடர்ச்சியாக மோகினி யாக அழகிய பெண் அவதாரம் எடுத்து...