Posts

Showing posts with the label ஜமதக்கனி

மகாபாரத கதாபாத்திரங்கள் (103)-ஜமதக்கனி

ஜமதக்கனி 1)தந்தை ரிஷிகமுனி- சத்தியவதி (இவர் வேறு சத்தியவதி) 2)மகன்கள் வசு,  விஸ்வா வசு,  பிருகத்யானு,  பிருத்வான்கண்வர் இராமபத்திரன் ( பரசுராமர் ) (விஷ்ணுவின் 6வது அவதாரம்) 3)மனைவி ரேணுகா  ( பிரஸ்னசித் என்ற சூரிய குல மன்னரின் மகள்) 4)யாரின் வழித்தோன்றல் பிருகு முனிவர்   (பிரஜாபதி) 5) கிளைக் கதைகள் அ)மனைவி  ரேணுகாவை  கொல்ல மகன் பரசுராமரை உத்தரவிடுதல் ஆ)கார்த்தவீரிய அர்ச்சுனனை ஜமதக்கனி மகன் பரசுராமர் வதைத்தல் இ) ஜமதக்கனி இறப்பு ஈ)மகன்  பரசுராமரின்  சபதம் ஊ) ஜமதக்கனி, பரசுராமர் பிறப்பு எ)பிருகு முனிவரே சிவபெருமான் பிரணவப்பொருள் மறக்க காரணமாதல். ஏ) திருமாலின் 6வது அவதாரம் பரசுராமர்  

மகாபாரத கதாபாத்திரங்கள்- ஜமதக்கனி, பரசுராமர் பிறப்பு

ஜமதக்னி, பரசுராமர் பிறப்பு பிருகுமுனிவரின்  வழித்தோன்றலான ரிசிகமுனி ,  காதி அரசின் மகளான சத்தியவதியை மணக்க விரும்பினார். கடும் அந்தணர் தவ வாழ்வு வாழ்ந்த ரிஷிகமுனியே எங்களது இனத்தில் திருமணத்திற்கு என்று ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. பழுப்பு உடல், கருப்பு காது கொண்ட ஆயிரம் குதிரைகளை நீ தந்தால் என் மகள் சத்தியவதியை உமக்கு மனம் முடித்து தருவேன் என்று காசி அரசன் கூறினார்.   பிருகுவின்  வழிதோன்றலான ரிசிகமுனி, வருணனிடம் வேண்டி பழுப்பு உடல், கருப்பு கொண்ட ஆயிரம் குதிரைகளை பெற்றான்.  கங்கை நதியில் இருந்து 1000 குதிரைகள் எழுந்து வந்தது. காசி கேட்டதுபோல் ஆயிரம் குதிரைகளை அளித்து சத்தியவதியை ரிசிகமுனி மணந்தார் . ஒருமுறை பிருகு முனிவர் இவர்களின் குடிலுக்கு வந்தபோது சத்தியவதியிடம் உனக்கு என்ன வரம் வேண்டும் கேள் என்றார்.  எனக்கும் என் தாய்க்கும் ஒரு ஒரு மகன் வேண்டும் என்று கேட்டாள்.   நீ அத்தி மரத்தையும் உன் தாய் அரச மரத்தையும் சுற்றவேண்டும்.  இந்த குவளையில் உள்ள அரிசி பால் உணவை நீ உண்ண வேண்டும் என்றும் வேறு ஒரு குவளை கொடுத்து உனது தாய் அதை உண்ண வேண்டும் ...