Posts

Showing posts with the label வாழ்வியல் கலை

வாழ்வியல் கலை- சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி

சூழலுக்கேற்ற மனமுதிர்ச்சி  மகிழ்ச்சியான வாழ்விற்கு நமது மனமுதிர்ச்சியும் (maturity to the mind) முக்கிய பங்கு வகிக்கிறது, மனம் அமைதியான நிலையில் பதட்டமின்றி எப்போதும் வைத்திருக்க முயல்வதும், எந்த செயலையும் மன அமைதியுடன் செய்ய முற்படுவதும், புரிந்து கொள்வதில் முதன்மை நிலையில் இருப்பதும், எந்த சூழ்நிலைகளையும் தனதாக்கி சிறப்பானதாக உருபெறச்செய்வதும் முழு மனமுதிர்ச்சி உடையவர்களிடம் இயல்பாக இருக்கும். எது நல்லது எது கெட்டது, எது சரி எது தவறு என அட்டவணையிட்டு வகைப்பாடுகளுக்கு முக்கியத்துவம் அளிக்காமல் காலச்சூழலுக்கு ஏற்றவாறு மனிதனுக்கு மனிதன் மாறுபடும் செயல்பாடுகளை பகுத்தறிந்து ஏற்பதும், நிதர்சனத்தை புரிந்து கொள்வதும் முழு மனமுதிர்ச்சி கொணடர்வர்களின் குணமாகவும் அமைந்திருக்கும்.  ஒரளவிற்கான மனமுதிர்ச்சி கொண்டவர்களாக நம்மை மாற்றிக்கொள்வது நம்முடன் பிரயாணிப்பவர்களுக்கு நம்முடனான பயணம் இனிமையானதாகவும், விருப்பமுள்ளதாகவும் அமையும். மனமுதிர்ச்சி ஏன் வேண்டும் என்ற கேள்வி முன்வைக்கப்படும் போது, மற்றவர்களை திருத்துவதை பிரதானவேலையாக எடுத்து நமது பொன்னான நேரத்தை வீணடிக்காமல் சக மனிதர்களுடனான ...

வாழ்வியல் கலை- சுயமதிப்பை வளர்த்தல்

சுயமதிப்பை வளர்த்தல் சுயமதிப்பு என்பது அவரவர் அவரரை விரும்புதல், ஏற்றுக்கொள்ளுதல், அங்கீகரித்தல், மதித்தல் மாற்றத்தை ஏற்றல் போன்றவற்றுடன் தொடர்புடையது. நாம் முதலில் நம்மை விரும்ப வேண்டும். இது மனம் சார்ந்த ஒன்றாகும். நமக்கான புறசூழல்களை அங்கீீகரித்து முன்னேற்றத்திற்கான வழிகளை தேடுதல் சுயமதிப்பை கூட்டும்.  சுயத்தை வெறுப்பதையும் சுயத்தை கேலிப்பொருளாக மற்றவர்கள் முன் சித்தரிப்பதும் சுயமதிப்பை வேரருக்கும்.  சுயமதிப்பை வளர்த்தலின் அவசியம் யாதெனில் நாம் நம்வாழ்வில் நம்மையும் மதித்து சக மனிதர்களையும் மதித்து நமது வாழ்வை அடுத்த நிலைக்கு உயர்த்துவதற்கான வழிதேடுதல் அவசியம். விதியை தொடர்ந்து நொந்து சொல்வதை விடுத்து, நாமே நம்மை விரும்பி, நம்மிடம் உள்ள திறமையை தேடி எடுத்தலும் உயர் லட்சியங்களை பொருத்தி அதனை அடைதலுக்கான மார்க்கங்களை காணுதலும் வாழ்வில் நிச்சயம் வெற்றி தரும். நாம் நம் மீது வைத்திக்கொள்ளும் கணிப்பே சுயமதிப்பு  ஆகும். அதாவது நம்மைப்பற்றி நாம் என்ன உணர்கிறோம் என்பது சுயமதிப்பு ஆகும். உயர் சுயமதிப்பு கொண்டவர்கள் எப்போது மிக்க தன்னம்பிக்கை கொண்டவர்களாகவும் தன்னைத்தானே விரும்பு...

வாழ்வியல் கலை - நேர்மறை சிந்தனைகள்

நேர்மறை சிந்தனைகள்:-   நேர்மறை சிந்தனைகள் என்பது, மனித வாழ்வில் மிக முக்கிய அம்சமாகும்.  மகிழ்ச்சியான வாழ்வியலில் விரும்பியதை ஈர்ப்பதற்கும், வெற்றிக்கான பாதையை தேர்ந்தெடுப்பதற்கும், இலக்கை நோக்கி நகர்வதற்கும், செல்வத்தை ஈர்ப்பதற்கும் என பல்வேறு நிலைகளுக்கு, நமது  நேர்மறை சிந்தனைகள், நேர்மறை எண்ணங்கள், நேர்மறை வார்த்தைகள் போன்றவை மார்க்கங்களாக அமைகிறது.  நேர்மறை வார்த்தைகள் வெளிப்பட வேண்டும் எனில், நமது சிந்தனைகள்  நேர்மறையாக அமைய வேண்டும்.        “நீ எதுவாக ஆக வேண்டும் என்று விரும்புகிறாயோ, அதுவாக ஆவாய்” என்ற சுவாமி விவேகனந்தரின் வரிகள்,  இதனை உறுதி செய்கின்றன.        நேர்மறை எதிர்மறை என இரு வாக்கியங்களைத்தான்  நாம் வாழ்வில் அதிகம் பயன்படுத்துகிறோம்.  நாம் தினம் பயன்படுத்தும் வாக்கியங்களில் பெரும்பாலும் இடம் பெறுபவை, நேர்மறை வாக்கியங்களா? எதிர்மறை வாக்கியங்களா?  எனச்சிந்தித்து, மாற்றம் தேவைப்படின், மாற்ற வேண்டும். நம் எதிர்காலம் பற்றிய பயமும், சூழ்நிலைகளால் ஏற்படும்  தாக்கத்தினால்தான், எண்ணங...

வாழ்வியல் கலை

தன்னம்பிக்கை மாத இதழில் தொடராக இந்த கட்டுரைகள் வெளி வந்தது. தலைப்பு : வாழ்வியல் கலை பாகங்கள் 1)  பெண்கள் 2) பதின்பருல துளிர் காதல் 3)  வெற்றியின் அவசியம் 4) சமூக வேலிகள் 5)  குழந்தைகளுடன் பழகுதல் 6)  நண்பர்களை தேர்ந்தெடுத்தல் 7) கனவுகளின் வலிமை 8)  மனசாட்சி ஒரு பார்வை 9) மனஅழுத்தம் உடைத்தெறிதல் 10) இறைநம்பிக்கை பற்றிய தெளிவு 11) நேர்மறை சிந்தனைகள் 12) சுபமதிப்பை வளர்த்தல் 13) சூழலுக்கேற்ற மனமுதிர்ச் சி  14 )மாற்றம் ஒன்றே மாறாதது 15) நிகழ்காலத்தில் வாழ்தல் 16) ஆண் பெண் உளவியல் 17)  உறவுகளுடனான பயணம் 18) நேர்மறை உணர்வுகள் 19) எது சரி எது தவறு 20) அளவுடனான நேசம்

வாழ்வியல் கலை - மன அழுத்தம் உடைத்தெறிதல்

மனஅழுத்தம் உடைத்தெறிதல்     வாழ்வில் மனதை உறைய வைக்கும் ஏமாற்றங்கள், வடுவாக்கும் பிரிவுகள், அனுக்‌ஷனமும் நினைவூட்டும் இழப்புகள், தாங்கொணாத துயரங்கள், மன்னிக்க இயலா துரோகங்கள், காரணமின்றி ஏற்பட்ட காயங்கள் போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளால், மனம் சோகங்களினால் ஏற்பட்டிருக்கும் தேக்கத்தினால் வெளிப்படும் பாதிப்பே, தீவிர மனஅழுத்தம் எனப்படுகிறது. தன்னைச்சுற்றி நடக்கும் நிகழ்வுகளால் ஏற்படும் அழுத்தம், உடலிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.  இவைகள் உடலில் பல ரசாயன மாற்றங்களை ஏற்படுத்தி, உடல் உபாதைகளை ஏற்படுத்தி விடும்.  இதனால், உடலில் நோய் எதிர்ப்புத்திறனையும்   குறைத்து விடக்கூடும். அதிக கவலைகள், தினசரி ஏற்படுகின்ற வேலைப்பளு, முடிவெடுக்க முடியாமல் தடுமாறும் விடயங்கள்,புறச்சூழல் போன்றவை, தற்காலிக மனஅழுத்தத்தை,  தினம் தினம் ஏற்படுத்தக் கூடும்.      ஏற்படும் மனஅழுத்தத்தால் பதட்டம், பரபரப்பு, பயம், எதிர்மறை எண்ணங்கள், தன்னுணர்வற்ற நிலை, எதிலும் நாட்டமின்மை,தெளிவற்ற மனம், கவனமின்மை, கவனச்சிதறல் போன்ற செயல்களை ஏற்படுத்தி, மனம் இயம்பு நிலையில் இருக்க ...

வாழ்வியல் கலை - மனசாட்சி ஒரு பார்வை

மனசாட்சி ஒரு பார்வை                                                                       உருவமில்லா  ஒரு அச்சுறுத்தும் மாயக்குரல், நாம் வளர்ந்த சூழ்நிலை, மதம், இனம், காலம், கலாச்சாரம் இதை வைத்து,  எது சரி. எது தவறு என்று நமக்குள், ஒரு அட்டவணை பதிந்திருக்கும்.  இது, நபருக்கு நபர் மாறுபடும். இந்த  அட்டவணையில்,  சரி என்ற பக்கத்தில் உள்ளவற்றை நீங்கள் செய்தால், இந்த உருவமில்லாக் குரல் - உங்களைப் பாராட்டும்.  “சபாஷ் பா”.  அதே அட்டவணையில் உள்ள,  தவறு என்ற பக்கத்தில்  இருக்கும் செயல்களை, நீங்கள் செய்தால், இந்த உருவமில்லா மாயக்குரல் - உங்களை எச்சரிக்கும்.  `ஏய்’,  நீ,  ரொம்ப ஓவரா போறே”,   இது தப்பு,  இதை,  திரும்ப செய்யாதே” என்ற இந்த உருவமில்லா ஒரு மாயக்குரலே, மனசாட்சி என்று சொல்லப்படுகிறது.          ஏன் மனசாட்சி...

வாழ்வியல் கலை- கனவுகளின் வலிமை

                                                  கனவுகளின் வலிமை               “தூக்கத்தில் வருவது கனவல்ல.   நம்மை தூங்கவிடாமல் செய்வதே கனவு” என்ற,  டாக்டர் A.P.J.அப்துல் கலாம் அவர்களின் பொன்மொழியை மையப்படுத்தியே, இந்த “கனவுகளின் வலிமை”.  நமது எதிர்கால இலட்சியங்களை சரியாகப் பொருத்தி, அதனை நோக்கிய பயணத்தில் ஏற்படும் சிக்கல்களை நீக்கி, பயணத்தைத் துரிதப்படுத்தி, அடைய வேண்டிய இடத்தினை அடைதலுக்கு உண்டான காட்சியின் வடிவமே கனவு.    மனிதனாகப்பிறந்தவர்கள் விலங்குகள் போல, உணவிற்காக மட்டுமே வாழ்வினை வாழ்ந்துவிட முடியாது.   நமது சமூக சூழலுக்கேற்ப அவரவர்களுக்கென பொருள் தேடுதல் என்பதும், அதன் மீதான கனவுகளின் பயண தூரமும் அமையும்.   வாழ்வில்,  இலட்சியங்கள் இல்லாதவன்,  மனநலமின்றி வாழும் மனிதனாக மட்டுமே இருக்க இயலும். இலட்சியங்கள் இல்லை என்பவர்கள், அவர்களுக்குள் இருக்கும் இலட்சியங்களை...

வாழ்வியல் கலை- நண்பர்களை தேர்ந்தெடுத்தல்

  நண்பர்களை தேர்ந்தெடுத்தல்   நட்பு என்பது உணர்வுகளோடு தொடர்புடைய ஒரு உறவு..    இருவரிடையேயோ குழுக்களாகவோ அமையும்.   புரிதல், அனுசரித்தல், உதவுதல், கருத்துக்களைப் பரிமாறுதல் போன்ற இனங்களில் ஒரே மாதிரியான குணங்களுடையவர் உடனான உறவுகள் நட்பாக மலருதல் இயல்பு.  இதில், பாலின மாறுபாடுகளுடன் கூட நட்புகள் அமையும். நட்பென்பது நேரடி நட்பாகவும், மறைமுக நட்பாகவும், கடித வழி நட்பு, இன்றைய முகநூல்  நட்பு என பல வகைகள் உள்ளன.      நட்புணர்வு என்பது பிரதிபலனை எதிர்பார்க்காமல், மனதில் தியாக எண்ணங்களையும், ஆத்மார்த்தமாக உணர்வுகளையும் காட்டும் மனக்கண்ணாடியாக அமைய வேண்டும். நட்பு நம்பிக்கையை மட்டுமே அஸ்திவாரமாகக் கொண்டு உருவாகக்கூடியது. அதனால்தான், நட்புகளில் விரிசல்கள் ஏற்படும்போது,  நம்பிக்கை துரோகி என்று சொல்வதுமுண்டு.  துரோகம் என்பது,  நட்பின் விரிசலுக்கான இடமாக அமைந்து விடும். நண்பர்களை தேர்ந்தெடுத்து, நெருக்கத்திற்கான அளவை  நிர்ணயம் செய்து பழக வேண்டியது அவசியமாகும்.                  ...

வாழ்வியல் கலை-குழந்தைகளுடன் பழகுதல்

                                                       குழந்தைகளுடன் பழகுதல்       குழந்தைகள்  நமது லட்சியங்களை நிறைவேற்ற, நமக்குப் பிறந்தவர்கள் என்ற தவறான எண்ணமே, அவர்களின் மீதான பல கனவுகளின் திணிப்பு உருவாகி விடுகிறது.  அவர்கள், நம் மூலம் இப்பூவுலகைக் காண வந்தவர்கள்.  நமது இயலாமையால் வாழ்வில் நிறைவேறாக் கனவுகளை அவர்களின்  தலைமீது பாரமாக இறக்கி வைக்க நினைப்பதன் தாத்பரியம் உணர்தல் அதிஉத்தமம்.                பள்ளிப்பருவத்தில் குழந்தைகள் கற்க வேண்டிய மனிதம், அறம், சுயமரியாதை, நீதி ஆகியவை  போதிக்கப்படுவது நடைபெறுகிறதா? என்றால், அது காலத்தின் வேகத்தால் பல பெற்றோரின் கவனத்தில் இருந்து வெகு தொலைவில் சென்றுவிட்ட ஒன்றாகவே அமைந்து விடுகிறது.  விட்டுக் கொடுத்தல், பகிர்ந்து வாழ்தல், மன்னித்தல், மறத்தல்  ஆகிய பண்புகளை குழந்தைகளுக்கு பெற்றோர் ஊட்டி விட வேண்டும். பள்ள...

வாழ்வியல் கலை - சமூக வேலிகள்

சமூக   வேலிகள்                  ******   ஆண் பெண்  இருபாலர்களுக்குமென சமூக வேலிகளின் தன்மையில், வேறு வேறு கோணங்களில் முன்வைக்கப்படும் காரணங்களுடன் காணுதல் அவசியம்.     பெண்களுக்கு வெளிச்சூழல்களில் சுற்றித் திரிதலில் உள்ள கட்டுப்பாடு, ஆண்களுக்கு இருப்பதில்லை என்பதன் நோக்கம் – பெண்களின்  உடல் ரீதியான தாக்குதலினால் ஏற்படும் எதிர் விளைவுகளுக்கான,  பாதுகாப்பு கவசமாகவும் கருதலாம்.  மேலும், கற்பு எனும் நெறி,  இரு பாலருக்கும் என சொல்லப்பட்டுக் கொண்டிருந்தாலும், அதன் உரிய நிதர்சனத்தை புரிந்து பார்த்தோமானால், ஒரு பாலிருக்கான பாதுகாப்பின் வளையமாகவும் கருதப்படுகிறது.    இதனையே, எதிர் கோணத்தில் பார்த்தால்,  பதின் பருவ  வயதில் ஏற்படும் உடல் ரீதியான மாற்றங்களில் உந்தப்பட்டு,  தவறுகளுக்கு ஆட்பட்டு விடும் பெண் மகவுகளுக்கும்,  அல்லது பாலியல் துன்பங்களுக்கு ஆளாகிவிடும் சிறுமிகளின் ஆழ் நெஞ்சில்,  தாம் வாழ தகுதியற்றவர்களோ,  என ஆழ்மன பாரத்துடன், மனம் எப்போதும் சதுராடிக்கொண்டே இருக...