Posts

Showing posts with the label பிராணன்

மகாபாரத கதாபாத்திரங்கள் (86)- விராடன்

விராடன் 1)எநத நாட்டு மன்னர் மத்சய நாட்டு மன்னர் 2)மனைவி சுதேஷ்னை 3)மைத்துனர் கீசகன் 4)மகள் மருமகன் உத்தரை - அபிமன்யு 5)மகன் உத்தரன் , சுவேதன் மற்றும் சாங்கியன் 6)மகள் வழிப்பேரன் பரீட்சித்து 7)இறப்பு குருஷேத்திரப் போரில் முதல் நாள் போரில் சல்லியனால்      விராடனின் மகன்  உத்தரன் கொல்லப்பட்டான். அவனது சகோதரர்கள், சுவேதன் மற்றும் சாங்கியன் ஆகியவர் சல்லியனாலும் , துரோணராலும் , குருச்சேத்திரப் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர். 8)அஞ்ஞாத வாசத்தின் போது பாண்டவர்கள் தங்கியிருந்த ஊர் மற்றும் அவர்களின் பெயர்கள் விராடம் யுதிஷ்டிரன் சந்நியாசி வடிவில் கங்கபட்டர் என்ற பெயரிலும்,  பீமன் , மல்லன் எனும் பெயரில் சமையலிலும்,  அர்ஜுனன் பிருகன்னளை என்ற பெயரில் பேடியாக நடனம் கற்பிப்பவளாகவும்,  நகுலன் - சகாதேவன் தாமக்கிரந்தி - தந்திரிபாலன் என்ற பெயர்களில் பசு - குதிரைகளைப் பராமரிப்பவர்களாகவும் பணி புரிந்தார்கள். திரௌபதி   சைரந்தரி என்ற பெயரில் அரசிக்கு கூந்தல்் அலங்கா பணிப்பெண்ணாக பணிபுரிந்தாள்.