சிந்தனை ஒழுக்கம்

சிந்தனை ஒழுக்கம்.

எண்ணங்களின் கோர்வையே சிந்தனையாகும்.  
நல்ல எண்ணங்களின் கோர்வை நேர்மறை சிந்தனை .
 கெட்ட எண்ணங்களின் கோர்வை எதிர்மறை சிந்தனை ஆகும்.

எவ்வளவுதான் நல்லவராக இருந்தாலும் சிந்தனையில் ஒழுக்கம் இல்லை என்றால் அவர்களின் எதிர்மறை சிந்தனை கெட்டவற்றை மட்டுமே அவர்களிடம் கொண்டு சேர்க்கும்.
எது நல்லது எது கெட்டது என்பதும் சரி தவறு என்பதும் பிரபஞ்ச ஈர்ப்பு விதிக்கு தெரியாது.

"நாம் எந்த உணர்ச்சியால் தொடர்ந்து சூழப்பட்டு இருக்கிறோமோ   அந்த உணர்ச்சியை அதிகரிக்கச் செய்வதே பிரபஞ்சத்தின் ஈர்ப்பு விதி தத்துவமாகும்"

எனவே சிந்தனையில் ஒழுக்கம் கண்டிப்பாக தேவை .
 
நேர்மறை சிந்தனையின் விளைவுகள்

 1)ஆரோக்கியம், மகிழ்ச்சி, செல்வம், நல்ல மனிதர்கள், நல்ல உறவுகள் உடன் இருப்பர்

2) சிக்கலை தீர்ப்பதில் கவனம் செலுத்துவார்கள். பிரச்சினைகளை சவால்களாக கருதுவர்

 3)மோசமான மனிதர்களுடன் கூட சிறந்த உறவை பராமரிப்பர் .

4)தன் திறமைகளின் மீது நம்பிக்கை கொண்டிருப்பர்.

5) மன அழுத்தம் ஏற்படும் போது அதிலிருந்து விரைவில் தன்னை விடுவித்துக் கொள்வர்

6) நல்ல உறக்கம் கொள்வர் .

7) இவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி வலுவாக இருக்கும் .

8) ஈர்ப்பு விதியின்படி-
நல்லவற்றை மட்டுமே ஈர்ப்பர்.

எதிர்மறை சிந்தனையின் விளைவுகள்

1) வறுமை ,பகைமை உணர்வு, பற்றாக்குறை மனநிலை , நோய்  மற்றும் மோசமான மனிதர்கள் உடன் வசிப்பர்

2) தன்னம்பிக்கை இருக்காது

 3)அனைத்து உறவுகளையும் பகையாகவே எண்ணுவார் 

4)சிக்கலை உருவாக்குவதும் , உருவான சிக்கலை ஊதி பெரிது படுத்தவும் செய்வார் .

5)உடல் நலம் மற்றும் மனநலம் பாதிக்கப்படிருக்கும் 

6)மன அழுத்தத்துடனேயே இருப்பார்

7) இரவில் கூட தூக்கத்தினை இழப்பார்

8) ஈர்ப்பு விதியின்படி-
மோசமான சூழ்நிலைகள், மோசமான மனிதர்களையும் ஈர்ப்பார்.

சிந்தினன ஒழுக்கத்துடன் நேர்மறையாக சிந்தித்து வாழ்வில் செல்வங்களையும்  நல்லவர்களையும் ஈர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து பயனடைவோம்.


Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி