மகாபாரத கதாபாத்திரங்கள்-கிருஷ்ணன், பலராமன் பிறப்பு

கிருஷ்ணன், பலராமன் பிறப்பு

மதுராவின் மன்னன்  உக்கிரசேனன் - பத்மாவதி தம்பதிகளின் மகன் கம்சன்.
உக்கிரசேனின் சகோதரன் தேவகனின்  மகள் தேவகி .
கம்சன் தேவகியின் சகோதரன்.


தனது சகோதரியான
தேவகிக்கு பிறக்கும் எட்டாவது குழந்தையால் தாய்மாமனான கம்சனுக்கு உயிரிழப்பு ஏற்படும் என்று அசரீரி தெரிவித்ததால் கம்சன் தேவகியையும் தேவியின் கணவரான சூரசேனன் மகன் வசுதேவரையும் மதுரா சிறையில் அடைத்தான்.

 சிறைச்சாலையில் தேவகிக்கு பிறந்த  குழந்தைகளை  பிறந்தவுடன் கொன்றுவந்தான்.

வசுதேவர்- தேவகியின் ஏழாவது குழந்தை கருவில் பிறப்பதற்கு முன்பாகவே யோகமாயை உதவியுடன் வசுதேவரின் முதல் மனைவியான ரோகிணியின் வயிற்றுக்கு மாற்றப்பட்டது.  அவ்வாறு பிறந்த குழந்தையே  பலராமன் ஆவார்.

 தேவகியின் எட்டாவது குழந்தையாக கிருஷ்ணன் பிறந்தான்.
வசுதேவர் கிருஷ்ணன் பிறந்த அன்றே யமுனை ஆற்றைக் கடந்து கோகுலத்தில் வாழும் யாதவர் குல தலைவரான தனது நண்பன் நந்தகோபனிடம் குழந்தையை ஒப்படைத்தான்.

கிருஷ்ணன் கோகுலத்தில் நந்தகோபன்- யசோதை தம்பதிகளுக்கு மகனாக வளர்ந்தான்..
கிருஷ்ணன் திருமாலின் ஒன்பதாவது அவதாரமாக கருதப்படுகிறது

விஷ்ணுவின் எட்டாவது அவதாரமாக பலராமன் கருதப்படுகின்றார்.  எனினும் திருமால் பார்க்கடலில் படுத்திருக்கும்  ஆதிசேஷன் வடிவமாகவும் கருதப்படுகிறது.





Comments

Popular posts from this blog

மகாபாரத கதாபாத்திரங்கள்(3) - அர்ச்சுனன்

செல்வம் சார்ந்த தலைப்புகள் (4)

விஜயசக்தி